டென்ஷன் கவலை பயம் போக்க இந்த ஆசனத்தை தினமும் செய்யலாமே..
டென்ஷன் கவலை பயம் போக்க இந்த ஆசனத்தை தினமும் செய்யலாமே..
செய்முறை :
வஜ்ராசனத்தில் அமரவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுக்கவும் மற்ற மூன்று விரல்கள் சேர்ந்திருக்கவும்). கண்களை மூடவும் இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளிவிடும் பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும். இதேபோல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து வெளிவிடவும்.
இப்பொழுது இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை அடக்கவும். கஷ்டப்பட்டு மூச்சை அடக்க வேண்டாம். எப்பொழுது மூச்சு வெளிவிட வேண்டும் என்ற உணர்வு வருகின்றதோ உடன் இரு நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும்.

No comments: