Breaking

நம்முடைய குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுவதை தவிர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள்





நம்முடைய குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுவதை தவிர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறைகள்


தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால், அதை தூண்டக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக் கூடாது. “தக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் வேறுபட்ட சுவைகளை முயற்சி செய்வதற்கு குழந்தைகள் தயாராகவே இருக்கிறார்கள். புரோக்கலி, கீரை வகைகள் உள்ளிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும்” என்று பேராசிரியர் பியூட்ர்ல் மேலும் கூறுகிறார்.

அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்த கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறும் அவர், “ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவுக்கு சர்க்கரையே காரணம். அதுமட்டுமின்றி, சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கிறது” என்று அவர் மேலும் எச்சரிக்கிறார்.

No comments:

Powered by Blogger.