ஆம்புலன்ஸ் வரலாறு பற்றி அறிந்து கொள்வோம்...
ஆம்புலன்ஸ் வரலாறு பற்றி அறிந்து கொள்வோம்
1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்க்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.
பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் `ஆம்புலேர்’ (Ambulare). அதற்கு இணையான ஆங்கிலச் சொல் ஹஙுஸஙீக். 1242-ல், `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்’ என்ற பொருளில் `ஹாஸ்பிடல்’ என்ற சொல் வழங்கி வந்தது. ஆம்புலன்ஸ் என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு- `உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம்’ என்பதாகும்.
19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதல்முறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கப்பட்டன.
1600- 1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்டு ராயல் துறைமுகத்தில் சிக் பே (sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது.
செயின்ட் ஜூன் டீ டீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.


No comments: