Breaking

ஏப்ரல்-03 கொசுவால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சலின் தொற்று நோய்களின் அறிகுறிகளைப் பற்றி ஆய்வு செய்த அமெரிக்க விலங்கியலாளர்-மார்ஸ்டன் பேட்ஸ் (Marston Bates) மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:-ஏப்ரல்-03


கொசுவால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சலின் தொற்று நோய்களின் அறிகுறிகளைப்  பற்றி ஆய்வு செய்த அமெரிக்க விலங்கியலாளர்-மார்ஸ்டன் பேட்ஸ்
(Marston Bates) மறைந்த தினம்.


பிறப்பு:-


ஜூலை -23 ஆம் தேதி, 1906 ஆம் ஆண்டு,மிச்சிகனில் பிறந்தார்.
1927 ஆம் ஆண்டில் புளோரிடா பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு BS ஐப் பட்டம் பெற்றார். 
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இருந்து அவர் 1933 ஆம் ஆண்டில் AM பட்டம் மற்றும் 1934 இல் Ph.D.,  பட்டம் பெற்றார். 


ஆராய்ச்சிகள்:-


தென் அமெரிக்காவில் அதிகமான மக்கள்
மஞ்சள் காய்ச்சல்(Yellow fever) பாதித்தனர்.

அப்போது இவர் மஞ்சள் காய்ச்சல் என்பது அதிகமான குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும்.

இது ஆர்.என்.ஏ வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்க்குகிறது.
மஞ்சல் காய்ச்சல் வைரஸ் கொசுக்கள் மூலம் பரப்புகிறது.

குறிப்பாக ஏடிஸ் எகிப்தியே எனும் கொசு இனத்தின் பெண் கொசு  கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. 



இக்காய்ச்சலால் உடல்வெப்பநிலை அதிகமாகும், குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.
மேலும் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி நோய் ஏற்படும் இது போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொண்டதால் இவற்றை பற்றி அறிய இவரது ஆய்வுகள் பெரிதும் உதவியது.


பணிகள்:-


1952 முதல் 1971 வரை அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 

அவர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்க அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சசினியர்களில் ஒருவரானார். 



நூல் வெளியீடு:-


இவர் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களை எழுதியவர். 


தி பட்டர்ஃபிளஸ் ஆஃப் கியூபா -1934,


 தி நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் மஸ்கிட்டோஸ் -1949


தி நேச்சர் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி- (1950),


 த ஃபாரஸ்ட் அண்ட் தி சீ- (1960) ஆகியவை அடங்கும்.


மறைவு:-


ஏப்ரல்-03, 1974 ஆம் ஆண்டு, தனது 67 வது வயதில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.