Home
APRIL
ஏப்ரல்-03. விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) பிறந்த தினம்.
ஏப்ரல்-03. விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) பிறந்த தினம்.
12:05
Read
இன்று பிறந்த நாள்:- ஏப்ரல்-03.
விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த,
ஜெர்மனி வானியற்பியலாளர்-
எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஏப்ரல்-03,
1641 ஆம் ஆண்டு இலீப்சிகுவில் பிறந்தார். மேலும் தன் படிப்பை டிரெசுடன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இவர் 1863 இல் இலீப்சிகு பல்கலைக்கழகத்துக்குச் சென்று பயின்றார்.
இவர் ஜேனாவில் தன் முனைவர் பட்டத்தை ஒண்முகில்கல், விண்மீன் கொத்துகள் ஆகியவை பற்றி ஆய்வுக்காக பட்டம் பெற்றார்.
பணிகள்:-
இவர் 1882 முதல் 1907 வரை போட்சுடாமில் இருந்த வானியற்பியல் வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார்.
ஆராய்ச்சிகள்:-
இவர் பிரீடுரிக் வில்கெல்ம் உருடோல்ஃப் எங்கல்மன் மேற்கொண்ட இரட்டை விண்மீன்களின் அளவீடுகளில் பங்கேற்றார்.
கீல் நகருக்கு 20 கி.மீ தெற்கில் இருந்த காமர்கெர்னில் முதன்முதலாக, வான்பொருள்களின் கதிர்நிரல் பகுப்பாய்வை மேற்கொண்டார். அப்போது இவருக்கு வில்கெல்ம் ஆசுவால்டு உலோக்சே உதவியாளர் ஆனார்.
விருதுகள்:-
பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தின் வால்சு பரிசு-(1890),
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்-(1893),
அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின்
என்றி டிரேப்பர் பதக்கம் (1893),
சாதனைக்கான இலாந்துசுகுரோனர் பதக்கம்-(1898),
இரிச்சர்டு சி. வைட் பர்ப்புள் தகைமைப் பதக்கம்-(1899),
புரூசு பதக்கம்-(1906) போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
எர்மன் கார்ல் வோகல் ஆகஸ்ட்-13, 1907 ஆம் ஆண்டு போட்சுடாமில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
நிலாவில் உள்ள குழிப்பள்ளம் வோகல்,
செவ்வாயில் உள்ள குழிப்பள்ளம் வோகல்,
குறுங்கோள் 11762 வோகல் போன்றவற்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல்-03. விண்மீன்களின் கதிர்நிரல் பகுப்பாய்வு செய்த, ஜெர்மனி வானியற்பியலாளர்- எர்மன் கார்ல் வோகல் (Hermann Carl Vogel) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
12:05
Rating: 5

No comments: