Home
APRIL
ஏப்ரல்-17 ஒளிமின் விளைவு மற்றும் கோட்பாட்டு இயற்பியலில் பங்குவகித்த ஜெர்மனி அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
ஏப்ரல்-17 ஒளிமின் விளைவு மற்றும் கோட்பாட்டு இயற்பியலில் பங்குவகித்த ஜெர்மனி அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
21:59
Read
ஏப்ரல்-17
ஒளிமின் விளைவு மற்றும் கோட்பாட்டு இயற்பியலில் பங்குவகித்த ஜெர்மனி அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஜெர்மனியில் வுட்டேன்பேர்க் ஊரில் மார்ச்-14,1879 ஆம் ஆண்டு பிறந்தார்.
தந்தை ரசாயனத் தொழிற்சாலை உரிமையாளர். இளம் வயதிலே அப்பா தந்த திசைக்காட்டி கருவியை ஓயாமல் ஆராய்ந்துவந்தார்.
இவருக்கு கணிதம், அறிவியலில் அளவில்லா ஆர்வம் பிறந்ததால் பயின்றார்.
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக்கில் பயின்றார். 1896 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து சூரிச் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.
பணிகள்:-
காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.
1905 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
சூரிச் மற்றும் பெராகுவே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.
ஆராய்ச்சிகள்:-
இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது. அதுவரை ஏற்கப்பட்டுவந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படைக் கொள்கைகளை இவரது கோட்பாடு மாற்றியமைத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கினார்.
ஒருங்கிணைந்த புலக்கோட்பாடு விதியை 1950-ல் வெளியிட்டார்.
E = mc 2" -
An equation derived by the twentieth-century physicist Albert Einstein, in which
E- represents units of energy,
m- represents units of mass, and
c 2 -is the speed of light squared, or multiplied by itself ஆகும்.
‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.
எளிமையான இவர், தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்!
‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.
விருதுகள்:-
பர்னார்டு பதக்கம்- (1920),
மேட்டூசி மெடல்- (1921),
ForMemRoyalSociety- (1921),
கோப்ளி மெடல்- (1925),
ராயல் வானியல் சங்கத்தின் தங்க பதக்கம்-(1926),
மேக்ஸ் பிளாங்க் பதக்கம்-(1929),
டைம் நபர் தி செஞ்சுரி (1999), போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
1933-ல் அமெரிக்கா நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இணைந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தும், அமெரிக்க குடியுரிமையும் பெற்ற இவர், உடல்நிலை சரியில்லாததால் 1955, ஏப்ரல்-17 ஆம் தேதி மரணமடைந்தார்.
ஏப்ரல்-17 ஒளிமின் விளைவு மற்றும் கோட்பாட்டு இயற்பியலில் பங்குவகித்த ஜெர்மனி அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:59
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:59
Rating: 5


No comments: