Breaking

ஏப்ரல்-17.பிளவு மூளை மற்றும் வலிப்பு நோய் கண்ட நோயாளிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்தவர்- ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி (Roger Wolcott Sperry) நினைவு தினம்.








ஏப்ரல்-17.பிளவு மூளை மற்றும் வலிப்பு நோய் கண்ட நோயாளிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்தவர்-
ரோஜர் வால்காட் ஸ்பெர்ரி (Roger Wolcott Sperry) நினைவு தினம்.

பிறப்பு:-

அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட்,
கனெக்டிகட் நகரில் ஆகஸ்ட்-20, 1913 ஆம் ஆண்டு பிறந்தார்.
உள்ளூர் உயர் நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். 
கல்வி உதவித் தொகை பெற்று ஓபர்லின் கல்லூரியில் பயின்றார்.
பிறகு MA- பிஸியாலஜி
1937 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.
1941 ஆம் ஆண்டு 
பால். ஏ .வெயிஸ் அவரின் கீழ்
 சிகாகோ பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முனைவர் -(Ph. D.,)பட்டம் பெற்றார். 

ஆய்வுகள்:-

மனம் மற்றும் மூளையைக் குறித்து சிந்தித்து
ஆய்வுகள் மேற்கொண்டார்.
மேலும், இயக்க மற்றும் உணர்ச்சி நரம்புகளை சீரமைப்பதில் சோதனைகள் மேற்கொண்டார்.

பிளவு மூளை மற்றும் வலிப்பு நோய் கண்ட நோயாளிகளைக் குறித்த இவரது ஆராய்ச்சி மேற்கொண்டார்.

மூளையின் வலது, இடது  அரைக்கோளங்களை இணைக்கும் ‘கார்ப்பஸ் கலோஸம்’ (corpus callosum)  தகவல்களைக் கடத்துகிறது. மேலும் தனித்தனியாகவும் குறிப்பிட்ட சில செயல்களை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.

பின்னர் மைக்கல் கஸானிகா என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து மூளை செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகளை 1967 ஆம் ஆண்டில் மேற்கொண்டதில், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த ‘கார்ப்பஸ் கலாஸம்’ இல்லை என்றால் ஒரு பக்க மூளைக்கு மற்ற பக்கத்தின் அறிவு வளர்ச்சி பற்றி எதுவுமே தெரியாது என்பதை நிரூபித்தார்கள். 
மேலும், இவர், நடத்திய பரிசோதனைகள் நான்கு முக்கிய கருத்துக்களில் கவனம் செலுத்துகின்றன, அவை "டர்ன்அரவுண்ட்ஸ்" என்றும், சமச்சீரற்ற தன்மை, பிளவு மூளை ஆய்வுகள், நரம்பு மீளுருவாக்கம், மற்றும் சிற்றின்பம் மற்றும் நனவின் உளவியல் போன்றவை சிறப்பு வாய்ந்ததாகும்.

பணிகள்:-

 1952-ல் ‘அமெரிக்கன் சயின்டிஸ்ட்’ என்ற  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் தனது கருத்துகளை வெளியிட்டார். தேசிய சுகாதார நிறுவனத்தின் நரம்பியல் நோய்கள் மற்றும் பார்வையின்மை துறைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.



 ஃப்ளோரிடாவில் மரைன் பயாலஜி ஆய்வுக்கூடத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்தில்  சைக்காலாஜி துறையில் அசோசியேட் பேராசிரியராகவும் கலிஃபோர்னியா தொழில்நுட்ப அமைப்பின் Psychobiology பேராசிரியராகவும் பணியாற்றினார்.


நூல்கள்:-


‘ரெஃவ்யூ ஆஃப் ஜெனரல் ஃபிசியாலஜி’,

 ‘சயின்ஸ் அன்ட் மாரல் ப்ரியாரிட்டி’ போன்ற நூல்களை எழுதினார்.


விருதுகள்:-

1976 ராயல் சொசைட்டி வெளியுறவு உறுப்பினர் (ForMemRS),



1979 ஆல்பர்ட் லாஸ்கர் மருத்துவ ஆராய்ச்சி விருது,



1980 அமெரிக்க அகாடமி ஆப் அட்வைவ்மெண்ட் கோல்டன் பிளேட் விருது,

1981 மருத்துவம் நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது,


1982 கெளரவ டாக்டர் ஆப் சயின்ஸ் டிகிரி, ஓபர்லின் கல்லூரி வழங்கியது,


1987 மென்டார் சொசைட்டி விருது,


1989 நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ்,

1993 வாழ்நாள் சாதனையாளர் விருது, அமெரிக்க உளவியல் கழகம், போன்ற விருதுகள் பெற்றார்.

இறப்பு:-

ஏப்ரல் -17, 1994 ஆம் ஆண்டு,
பசடேனா, கலிபோர்னியாவில் தனது 80 வது வயதில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.