Home
APRIL
ஏப்ரல்-17.இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநர்,ஆராச்சியாளர்,பேராசிரியர்-வின்சென்ட் பிரையன் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) பிறந்த தினம்.
ஏப்ரல்-17.இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநர்,ஆராச்சியாளர்,பேராசிரியர்-வின்சென்ட் பிரையன் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) பிறந்த தினம்.
21:46
Read
ஏப்ரல்-17.இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநர்,ஆராச்சியாளர்,பேராசிரி யர்-வின்சென்ட் பிரையன் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) பிறந்த தினம்.
பிறப்பு:-
இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள கிர்க்ஹாம் நகரில் ஏப்ரல்-17, 1899-ம் ஆண்டில் பிறந்தார். கல்வி உதவித்தொகை பெற்று கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சில ஆராய்ச்சிகளை தொடங்கியதுடன் அவரது பேராசிரியர் ஆலோசனைப்படி, கரப்பான் பூச்சி குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் பிறகுதான், பூச்சிகள்உலகின் மீது இவருக்கு ஆர்வம் பெருக்கெடுத்தது. பூச்சிகளின் உடல் அமைப்பு, திசுக்கள், உறுப்புகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
கண்டுபிடிப்பு:-
பூச்சிகளின் உருமாற்றம் குறித்த கண்டுபிடிப்பு முக்கியமானதாகும்.
தென் அமெரிக்காவில் உள்ள குருதி உறிஞ்சும் பூச்சிகளில் ஒரு முக்கியமான வளர்ச்சி ஹார்மோன், அதன் மூளைச் செல்களில் உள்ள நரம்புச் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது என்பது இவரது ஆய்வில் தெரியவந்தது.
சில பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டும்வரை, முதிர்ச்சிக்கான அம்சங்கள் அதன் உடலில் ஏற்படாதவாறு வேறு சில ஹார்மோன்கள் தடுக்கின்றன என்பதை கண்டறிந்ததால், ஜுவனைல் ஹார்மோன்(Juvenile hormone ) எனப் பெயரிட்டார்.
பூச்சியின உருமாற்றம் தொடர்பாக தெளிவான கோட்பாட்டை உருவாக்கியவர்.
பூச்சிகளின் அமைப்பியல் மற்றும் வளர்ச்சிப் பண்புகளை அவற்றின் மரபணு கூறுகளின் ஹார்மோன்கள் தீர்மானிக்கின்றன என்பதையும் கண்டறிந்தார்.
நூல்கள்:-
1934-ல் ‘இன்செக்ட் ஃபிசியாலஜி’ (Insect physiology என்ற நூலை எழுதினார். இது இன்றளவும் பூச்சியியல் துறை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாகத் திகழ்கிறது.
1939-ல் இவர் எழுதிய ‘தி பிரின்சிபல்ஸ் ஆஃப் இன்செக்ட் ஃபிசியாலஜி’ (The Principles Of Insect Physiology) என்ற நூல் அத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இன்றியமையாத நூலாக கருதப்படுகிறது.
தன் ஆராய்ச்சிகள் குறித்து 300 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். இவரது அனைத்து நூல்களுமே உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.
பதவி மற்றும் விருதுகள்:-
கேம்பிரிட்ஜில் உள்ள பூச்சிஉடலியல் பிரிவின் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
பயன்பாட்டு உயிரியல் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1964-ல் இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
1955-ராயல் பதக்கம்.
இறப்பு:-
பூச்சிகளின் உடற்கூறியல் குறித்து ஆராய்ந்து, ஒரு புதிய அறிவியல்
துறைக்கு அடித்தளமிட்ட வின்சென்ட் விகில்ஸ்வொர்த் 95-வது வயதில், பிப்ரவரி-11, 1994-ல் மறைந்தார்.
ஏப்ரல்-17.இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநர்,ஆராச்சியாளர்,பேராசிரியர்-வின்சென்ட் பிரையன் விகில்ஸ்வொர்த் (Sir Vincent Wigglesworth) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:46
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:46
Rating: 5


No comments: