ஏப்ரல்-17.உலக இரத்தம் உறையாமை தினம்(சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்!)
ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோய். சாதாரணமாக மனித உடலில் ஏதாவது காயம் ஏற்படும்போது வெளியேறும் ரத்தம் சிறிது நேரத்தில் உறைந்து விடும். ரத்தம் சிறிது நேரத்தில் உறைவது என்பது இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டோருக்கு உடம்பில் இருந்து வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரமானாலும் உறையாது. அதிக ரத்தப்போக்கு ஏற்படும் போது உயிரிழப்புகூட நிகழலாம். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட ஜீனில் இருந்து பரம்பரையாக பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இரத்த உறவுக்குள் திருமணம் நடக்காமல் இருந்தால், இப்படிப் பட்ட இறப்பு நிகழும் நோய்களை தவிக்கலாம்.இதன் முக்கிய காரணம் மரபணுவில் உள்ள சிக்கல்தான். இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே வரும். இந்நோய்க்கு இது வரை சரியான சிகிச்சை முறையை கண்டுபிடிக்கவில்லை. ரத்தத்தை உறைய வைக்க அதற்குரிய காரணிகளை ஊசிமூலம் உடம்பில் செலுத்தலாம். ஹீமோபிலியா நோயை அறிந்து அதை பற்றிய விழிப்புணர்வை நாம் பிறருக்கு ஏற்படுத்த வேண்டும்.


No comments: