Home
APRIL
ஏப்ரல்-18. சார்பியல் கோட்பாடு, ஒளிமின் விளைவு அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
ஏப்ரல்-18. சார்பியல் கோட்பாடு, ஒளிமின் விளைவு அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
23:29
Read
நினைவு நாள்:- ஏப்ரல்-18.
சார்பியல் கோட்பாடு, ஒளிமின் விளைவு அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஜெர்மனியில் மார்ச்-14, 1879 இல் பிறந்தார்.
கணிதம், அறிவியலில் ஆர்வம் இருந்தது.
ஆராய்ச்சிகள்:-
இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது.
குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
ஆய்வுக்கட்டுரைகள்:-
1) E=mc2.
2) hf = +Ek.
3) On the electrodynamics of moving.
நோபல் பரிசு:-
ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1920- Barnard medal.
1921-Matteucci medal.
அறிவியல் ஆக்கத்திற்கே:-
‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார்.
ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.
‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.
இறப்பு:-
இவரது உடல்நிலை மோசமானது. ‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்ததால் மருத்துவமனையில் ஏப்ரல்-18, 1955 இல் 76 வது வயதில் உயிர் பிரிந்தது.
ஏப்ரல்-18. சார்பியல் கோட்பாடு, ஒளிமின் விளைவு அறிவியலாளர்- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
23:29
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
23:29
Rating: 5


No comments: