Home
APRIL
ஏப்ரல்-18. கீமோதெரபி ஆராய்ச்சி, அமெரிக்க மருத்துவர்- ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings) பிறந்த தினம்.
ஏப்ரல்-18. கீமோதெரபி ஆராய்ச்சி, அமெரிக்க மருத்துவர்- ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings) பிறந்த தினம்.
23:27
Read
இன்று பிறந்த நாள்:- ஏப்ரல்-18.
கீமோதெரபி ஆராய்ச்சி, அமெரிக்க மருத்துவர்- ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings) பிறந்த தினம்.
பிறப்பு:-
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ஹோக்வியம் பகுதியில் ஏப்ரல்-18, 1905 பிறந்தார்.
அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள ஃபிராங்க்ளின் உயர்நிலைப் பள்ளி, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 1927-ல் வேதியியலில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை ஆசிரியர்,
மற்றும் மருத்துவக் கல்லூரியில் உயிரியல் ரசாயனத் துறை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1933-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
‘வெல்கம்’ ஆய்வுக்கூடத்தின் உயிரி வேதியியல் துறையில் 1942-ல் பணிபுரிந்தார்.
ஆராய்ச்சிகள்:-
1944-ல் அங்கு மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 2,6-டை அமினோ ப்யூரின் மற்றும் பி-குளோரோ ஃபீனாக்ஸி டை அமினோ பைரிமிடின் உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சியில் ஹிட்சிங்ஸ் தலைமையிலான குழு ஈடுபட்டது.
கீமோதெரபிக்கான மருந்துப் பொருட்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான முக்கிய கோட்பாடுகளை இக்குழு வெளியிட்டது.
இந்த கோட்பாடுகளை கண்டறிந்ததற்காக ஹிட்சிங்ஸ், சர் ஜேம்ஸ் பிளாக், கெர்ட்ரூட் எலியான் ஆகியோருக்கு கூட்டாக 1988-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஹிட்சிங்ஸின் கீமோதெரபி குறித்த ஆராய்ச்சிதான் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைக்க காரணமாக அமைந்தது.
பதவிகள்:-
பரோஸ் வெல்கம் ஆராய்ச்சி அமைப்பின் துணைத் தலைவராக 1967-ல் பதவி ஏற்றார்.
ட்யூக் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
உயிரி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட பரோஸ் வெல்கம் நிதி அமைப்பின் இயக்குநர், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்காவில் மருத்துவ வேதியியல் துறையில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அரங்கிலும் இவரது பெயர் இடம்பிடித்தது.
விருதுகள்:-
1968- Gairdner Foundation சர்வதேச விருது.
1974-ராயல் சொசைட்டி உறுப்பினர் விருது.
இறப்பு:-
மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் மனிதகுல நலனுக்காக வாழ்ந்த ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் 93 வயதில், பிப்ரவரி-27, 1998 இல் மறைந்தார்.
ஏப்ரல்-18. கீமோதெரபி ஆராய்ச்சி, அமெரிக்க மருத்துவர்- ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்ஸ் (George Herbert Hitchings) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
23:27
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
23:27
Rating: 5


No comments: