Home
APRIL
ஏப்ரல்-19.உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவர்- சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) மறைந்த தினம்.
ஏப்ரல்-19.உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவர்- சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) மறைந்த தினம்.
08:18
Read
ஏப்ரல்-19.உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவர்- சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) மறைந்த தினம்.
பிறப்பு:-
இங்கிலாந்து, ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிப்ரவரி-12,1809 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஷ்ராஸ்பெரியில் தொடக்கக் கல்வி கற்றார். சிறு வயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் ஆர்வமாக இருந்தார்.
அவரது கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்துவந்தது.
ஆராய்ச்சிகள்:-
கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிடைத்தது. 1831 டிசம்பர் 27-ல், தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில், ஃபிட்ஸ்ராயோடு தனது 22 வது வயதிலே பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
இது ஐந்து ஆண்டுகள் நீடித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பயணம் ஆகும். அந்தக் கப்பல் உலகையே வலம் வந்தது. ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றில் அரிய வகை உயிரினங்களின் எலும்புகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.
தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் சேகரித்தார்.
உயிரினங்களின் வாழ்க்கையில் இடத்துக்கு இடம் பல ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டார்.
தான் சேகரித்த எலும்புகளைக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கினார்.
டார்வின் கோட்பாடுகளின் முக்கிய அம்சங்கள்:-
மாறுதல் (பரிணாம வளர்ச்சி), மரபு வழி, உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் என்பதே ஆகும்.
டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு உருவானது.
மரபு வழி என்பது ஒரே மாதிரியான வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் என்பதைக் கண்டறிந்தார்.
உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் அனைத்து உயிரினங்களும் ஈடுபடுகின்றன என்று ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிவித்தார்.
உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும் என்றும் மற்றவை அழிந்துபோகும் என்றார். மேலும் இது புதிய இனங்களின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.
மனிதனின் முன்னோர் குரங்குகள் என்பதை ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார்.
நூல்கள்:-
கேலகாஸ் தீவுகள், ஐரோப்பிய தீவுகள் என ஐந்து ஆண்டுகள் பயணம் செய்து, சேகரித்த விலங்குகள் மற்றும் பறவைகளின் எலும்புகளை ஆய்வுசெய்து, ‘The voyage of the Beagle’ என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.
1859-ம் ஆண்டில், ‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species by Natural Selection) என்ற நூலை வெளியிட்டார்.
இவர் மொத்தம் பதினெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
பரிசும்,பட்டமும்:-
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
1853-ராயல் பதக்கம்,
1859-wollaston பதக்கம்,
கொப்லி விருது- (1864)
போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள்மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்த இவர்,
1882 ஆம் ஆண்டு, ஏப்ரல்-19 ஆம் நாள் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
டார்வின் நாள் (Darwin Day):-
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி- 12 ஆம் நாள் டார்வின் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகியிலும், அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல்-19.உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்குத் தந்தவர்- சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:18
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:18
Rating: 5


No comments: