Breaking

ஏப்ரல்- 20. ஜெர்மனி கண்டுபிடிப்பாளர், இயற்பியலாளர், கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்-கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் (Karl Ferdinand Braun) மறைந்த தினம்.






ஏப்ரல்- 20. ஜெர்மனி கண்டுபிடிப்பாளர், இயற்பியலாளர்,
 கம்பியற்ற தகவல்தொடர்பு முறை, வானொலி
மற்றும் தொலைக்காட்சி தொழில்
நுட்பத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்-கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்
(Karl Ferdinand Braun) மறைந்த தினம்.

பிறப்பு:-

ஜெர்மனியில் உள்ள 'ஹெஸ்ஸன் கேசல்' என்ற பகுதியில் புல்டா என்ற நகரத்தில் 1850 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று பிறந்தார்.
 உள்ளூரில் இலக்கணப் பள்ளி
ஒன்றில் சேர்ந்து கல்வி பயின்றார். 

இவர் சிறுவயதிலேயே 
அறிவியல் கட்டுரைகள் எழுதி அவை அனைத்தும் பல இதழ்களில் வெளியிடப்பட்டன.அறிவியலையும், 
கணிதத்தையும் பாடங்களாக எடுத்துக்கொண்டு 'மார்பர்க் பல்கலைக் கழகத்தில்' (University of Marburg) சேர்ந்தார்.
 பிறகு பெர்லின் பல்கலைக் கழகத்ததில்
இயற்பியலைச் சிறப்புப் பாடமாக  படித்தார். 

1872-ல் முதுகலைப் பட்டத்தையும் பிறகு முனைவர் பட்டத்தையும் பெற்றார். 

பணிகள்:-


1874-ல் லெய்ப்சிக் என்ற ஊரில் உள்ள புனித தாமஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்பர்க் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலில் மிகச் சிறந்த பேராசிரியர் என்ற வகையில் பணியில் அமர்த்தப்பட்டார். 


1883-ல் கார்ல்ஸ்குகே என்ற ஊரில் அமைந்திருந்த தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1885-ல் 'டூபின்சன் பல்கலைக்கழகத்தில்' சேர்ந்து பணியாற்றினார். 

அங்கு புதிய இயற்பியல் கல்வி நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்.

ஆய்வுகள்:-

மீள்சக்தியுடைய கம்பிகள், சுருள்கள் ஆகியவற்றின் அலைவுகள் (Oscillations of strings and elastic) குறித்து இவருடைய முதல் ஆய்வு அமைந்தது. 

கம்பிகள் இயங்கும் சூழ்நிலை, கம்பி அசையும் வீச்சின் தனமை ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் அலைவுகள் எவ்வாறு அமைகின்றன என ஆரய்ந்தார். 

வெப்ப இயக்கவியல் கொள்கையையும், திடப்பொருள்களின் கரை தன்மை, அழுத்தத்தைப் பொருத்து எவ்வாறு மாற்றமடைகின்றன என்ற ஆய்வினையும் மேற்கொண்டார்.

 ஓம் விதியிலிருந்து 
மாறுபட்டவைகள் பற்றியும், வெப்ப மூலங்களிலிருந்து மீளும் தன்மை கொண்ட தனிமங்களில் மின்னியக்கு விசையைக் கணக்கிடுவது பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். 

மின் பகுளிகளில் கரைந்துள்ள 
உலோக உப்புகளின் மின் கடத்தும் தன்மை பற்றி ஆய்வதில் தனிக்கவனம் செலுத்தினார். அவற்றில் கரையாத உலோக சல்பைடு படிகங்கள், பிற படிக வடிவமுள்ள திடப் பொருள்களின் 
மின்கடத்தும் தன்மை பற்றி ஆராய்ந்தார்.

 காரீய சல்பைடு கலந்த குறை மின்கடத்தியான கலினா(galena) என்ற படிகத்தின் மின் திருத்தும் தன்மையை இரு மின்வாயாக உருவாக்கிப் பயன்படுத்தினார். இதுதான் அன்றைய முதல் குறை மின்கடத்தியாகும். 




மின்னாய்வுக் கருவிகள்:-

 1897-ல் எதிர்மின் கதிர் அலையியற்றி ( Cathode ray oscillograph) ஒன்றையும் மின்னோட்டமானி (Eloctrometer) ஒன்றையும் உருவாக்கினார்.

 இவர் இவற்றை உருவாக்கிய சமயத்தில்தான் எதிர்மின் கதிர்கள் வெளியேற்றப்படுவது பற்றிய கருத்துகள் வெளியாயின,
 எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கம்பியில்லாத் தந்தி முறை:-

1898-இல் கம்பியில்லாத் தந்தி முறை ஆய்வுகளில் கவனஞ்செலுத்தினார். அதிக அதிர்வெண் கொண்ட மின்னோட்டத்தின் உதவியுடன் நீரின் வழியே மோர்ஸ்சைகைகளைப் பரப்பினார். அலைவின் மூடிய சுற்றை இதில் அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட திசைகளில் மின் சைகைகளைச் செலுத்தினார். 1902-ல் சாய்தள அலைபரப்பி சாதனம் மூலம் அனுப்பிய அலைகளைத் திரும்பப் பெறுவதில் வெற்றி கண்டார்.

மறைவு:-

 தன்னுடைய இறுதிக்காலத்தை அமெரிக்காவில் 
கழித்த இவர் 1918, ஏப்ரல் 20 ஆம் நாள் தனது, 67 வது வயதில் காலமானார்.

No comments:

Powered by Blogger.