Breaking

ஏப்ரல்-22. நிலாவின் கோள வடிவமின்மையை முதன்முதலில் நிறுவியவர்- மத்வேய் மத்வெயேவிச் கூசெவ்(Matvey Matveyevich Gusev) மறைந்த தினம்.






ஏப்ரல்-22.

நிலாவின் கோள வடிவமின்மையை முதன்முதலில் நிறுவியவர்-
மத்வேய் மத்வெயேவிச் கூசெவ்(Matvey Matveyevich Gusev) மறைந்த தினம்.

பிறப்பு:-

நவம்பர்-28,1826 இல் வ்யடிகா, ரஷ்யாவில் பிறந்தார்.

பணிகள்:-

இவர் புல்கொவோ வான்காணகத்தில் 1850 முதல் 1852 வரை பணிபுரிந்தார். பின்னர் வில்னியசு வான்காணகத்தில் பணியாற்றினார்.
1865 இல் வில்னியசு வான்காணக இயக்குநராக பணிபுரிந்தார்.

கண்டுபிடிப்புகள்:-

இவர் நிலாவின் கோள வடிவமின்மையை
(non-sphericityof the Moon)
 முதன்முதலில் நிறுவினார். இவர் நில்ல புவியை நோக்கி நீண்டிருப்பதைக் கூறினார். இவர் வானியலில் ஒளிப்பட முறையைப் பயன்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் ஆவார்.
இவர் வில்னியசு வான்காணகத்தில் இருக்கும்போது நிலாவையும் சூரியனையும், சூரியக் கரும்புள்ளிகளையும் ஒளிப்படம்
(sunspots)எடுத்தார்.


இதழ்கள்:-

இவர் 1860 இல் உருசிய மொழியில் 
Vestnik matematicheskikh nauk எனும் முதல் அறிவியல் இதழைத் தொடங்கினார். இது கணிதவியல், இயற்பியல் ஆய்வுகளை வெளியிட்டது.



மறைவு:-

ஏப்ரல்-22,1866 ஆம் ஆண்டு  ஜெர்மனியில் உள்ள பெர்லினில் இறந்தார். 

சிறப்புகள்:-

செவ்வாயின் ஒரு மொத்தல் குழிப்பள்ளம் இவரது நினைவாக குசேவ் குழிப்பள்ளம் எனப் பெயர் இடப்பட்டுள்ளது. செவ்வாயின் தேட்ட ஊர்தியாகிய 'இசுபிரிட்' இறங்கிய இடமாகியதால் பெயர் பெற்றது.

No comments:

Powered by Blogger.