Home
APRIL
ஏப்ரல்- 22. இங்கிலாந்து வானியலாளரும், கணிதவியலாளரும், புள்ளியியலாளரும், புவி இயற்பியலாளருமான- சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys) பிறந்த தினம்.
ஏப்ரல்- 22. இங்கிலாந்து வானியலாளரும், கணிதவியலாளரும், புள்ளியியலாளரும், புவி இயற்பியலாளருமான- சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys) பிறந்த தினம்.
08:02
Read
ஏப்ரல்- 22.
இங்கிலாந்து வானியலாளரும், கணிதவியலாளரும், புள்ளியியலாளரும், புவி இயற்பியலாளருமான-
சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஏப்ரல்-22, 1891 ஆம் ஆண்டு,
பேட்பீல்டு, இங்கிலாந்தில் பிறந்தார்.
இவர் தன் தந்தையாரின் பள்ளியில் கல்விகற்று, பின் தர்காம் பல்கழகத்தினைச் சேர்ந்த, நியூசேசிலில் இருந்த ஆர்ம்சுடிராங் கல்லூரியில் இலண்டன் பல்கலைக்கழகப் புறநிலைக் கல்வித் திட்டத்தில் பயின்று முடித்தார்.
பணிகள்:-
இவர் 1914 இல் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரியில் ஆய்வு உறுப்பினர் ஆனார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதமும் புவி இயற்பியலும் கற்பித்தார். பிறகு புளூமிய வானியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆராய்ச்சிகள்:-
இவரது பெரும்பங்களிப்புகள் நிகழ்தகவுக்கான பாயேசிய அணுகுமுறையை உருவாக்கியதும், புவி அகடு நீர்மநிலையில் அமைகிறது எனும் கருதுகோளும் ஆகும்.
விருதுகள்:-
ஆடம்சு பரிசு-(1926),
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்-(1937),
மர்ச்சிசன் பதக்கம்-(1939),
வில்லியம் போவி பதக்கம்-(1952),
கய் பதக்கம்- ( 1962),
வெட்லெசன் பரிசு-(1962),
வொலாசுடன் பதக்கம் -(1964) போன்ற விருதுகளை பெற்றார்.
நூல்கள்:-
1939-இல் இவர் வெளியிட்ட நிகழ்தகவுக் கோட்பாடு (Theory of Probability),
கணித இயற்பியல் முறைகள் (Methods of Mathematical Physics) எனும் நூல்கள் ஆகும்.
மறைவு:-
மார்ச்-18, 1989 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
ஏப்ரல்- 22. இங்கிலாந்து வானியலாளரும், கணிதவியலாளரும், புள்ளியியலாளரும், புவி இயற்பியலாளருமான- சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:02
Rating: 5
No comments: