தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்! சம்மரை சமாளிக்க நிச்சயம் உதவும்
தர்பூசணி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்! சம்மரை சமாளிக்க நிச்சயம் உதவும்
மார்ச் மாதம் தொடங்கிவிட்டாலே தர்பூசணி பழத்தின் விற்பனை களைகட்டத் தொடங்கிவிடும். ஏப்ரல், மே என கடும் வெயிலை சமாளிக்க இந்த பழம் உதவுகிறது. ஊரடங்கு உத்தரவு இப்போது இருந்தாலும், வண்டிகளில் வைத்து இந்த பழத்தை விற்பனை செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் வெப்பம் அதிகமாகி வரும் நிலையில், நீர்சத்து நிறைந்த இந்த பழத்தை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். தர்பூசணி பழத்தின் 5 முக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகம்
கோடை காலங்களில் நீர்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதால், சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, உடலின் நச்சுகளை வெளியேற்றச் செய்யும்.
ரத்த ஓட்டம்
வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறையும். தர்பூசணியை சாப்பிடுவதால் நீர்சத்து அதிகரிப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
உடல் எடை
உடல் எடை குறைக்க தர்பூசணி பெரிதும் உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கும். தினமும் காலை உணவாக இரண்டு கப் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இந்த பழத்தில் நிறைய சத்துகள் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்கள் இந்த பழத்தை டயட்டில் அதிகம் சேர்க்க சொல்ல காரணமும் இதுதான்.
இதயம்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்த அளவு கொழுப்பு மற்றும் நார்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம். தர்பூசணி பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
ஊட்டச்சத்து
நமது உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் இந்த அனைத்து சத்துகளும் நமக்கு கிடைக்கும்.
No comments: