Breaking

அறிவியல் வளர்ச்சியால் புதிய ஆபத்து வரலாம்! மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட வைரஸ்கள் ஆகியவையும் அடங்கும்' என்றார் ஹாக்கிங்.






அறிவியல் வளர்ச்சியால் புதிய ஆபத்து வரலாம்!


புதிய தொழில்நுட்பங்கள், மனித குலத்திற்கு, 'புது வித ஆபத்துகளை' ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருக்கிறார் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்,

ஜனவரி, 7 அன்று, பி.பி.சி.,யின் சிறப்பு பேருரையில் பங்கேற்ற அவர், கருந்துளைகளின் இயல்பு பற்றி சிறப்புரை ஆற்றினார். 

உலகம் இயற்கையாக அழியுமா, இல்லை மனிதர்களால் அழியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'மனித குலத்திற்கு பெரும் பாலான ஆபத்துகள், மனிதர்கள் உருவாக்கிய அறிவியல் தொழில்நுட்பத்தால் தான் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

அவற்றில் அணு ஆயுதப் போர், புவி வெப்பமாதல், மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட வைரஸ்கள் ஆகியவையும் அடங்கும்' என்றார் ஹாக்கிங்.

அடுத்த, 1,000 முதல், 10 ஆயிரம் ஆண்டு களில் பூமியில் பேரழிவு ஏற்படுவது, 'ஏறக்குறைய உறுதி' என்று சொன்னார் ஹாக்கிங். 



ஆனால், அதற்குள் மனிதர்கள் வேறு கிரகங்களில் காலனிகளை அமைத்து, பரவிவிடுவர் என்பதால், மனித குலம் அழிந்துவிடாது என்று அவர் கணித்தார். 

ஆனால், மனிதர்கள் அடுத்த, 100 ஆண்டுகளுக்குள், வேறு கிரகங்களில் சுய சார்புள்ள காலனிகளை அமைக்க வாய்ப்பில்லை என்பதால், 'இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நாம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்' என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். 

நாம் விஞ்ஞான முன்னேற்றத்தை நிறுத்தி விடவோ, அதன் போக்கை பின்னோக்கி திருப்பிவிடவோ போவதில்லை என்று சொல்லும் அவர், வரவிருக்கும் ஆபத்துகளை ஊகித்து, அவற்றை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார். 'நான் ஒரு நம்பிக்கைவாதி என்பதால், அதை நம்மால் சாதிக்க முடியும்' என்று ஹாக்கிங் உறுதிபடச் சொன்னார்.

-- ஸ்டீபன் ஹாக்கிங்

No comments:

Powered by Blogger.