மாணவர்கள் பேச்சாற்றலை வளர்க்க சபை கூச்சம்' தவிர்த்தால் மாணவர்கள் சிகரத்தை தொடலாம்
வளர்க்க
சபை கூச்சம்' தவிர்த்தால் மாணவர்கள் சிகரத்தை தொடலாம்
சிறப்பாக படிக்கும் மாணவர்களைவிட, சிறந்த பேச்சாற்றல் கொண்ட மாணவர்கள், செயல்திறன் சார்ந்த பல இடங்களில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பதை கண்கூடாக காணலாம். சொல்லப்போனால் வாழ்வில் மதிப்பெண்களைவிட, உங்களுக்கு மதிப்பு பெற்றுத் தரப்போவது பேச்சாற்றல்தான். பேசும்போது நாம் பேசும் தன்மை, குணம், தைரியம், அறிவுத்திறன் அனைத்தும் வெளிப்படும்.
பேச்சுத்திறனில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.
சொல்லக்கூடிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அதே சமயம், அதை யாரிடம் சொல்கிறோமோ, அவர்கள் கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார்களா? என்று உறுதிசெய்ய வேண்டும். மேலும் மற்றவர் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும். அப்படியிருந்தால்தான் நாம் அவர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகாமல், நம்மால் அவர்களுக்கு புரிய வைக்க முடியும்.
சொல்ல வந்ததைத் தவறாக வெளிப்படுத்தும்போது அது கருத்து வேற்றுமை, மனவருத்தம், உறவில் விரிசல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும்.
பேசப் பேசத்தான் பேச்சாற்றல் வளரும். தயங்கி நிற்பதால் தாழ்வு மனப்பான்மையே பெருகும். ஒரு அவையில் அல்லது நண்பர்கள் மத்தியில் பேசப்போகிறோம் என்றால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
No comments: