நீல திமிங்கலங்கள் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத உண்மை!
நீல திமிங்கலங்கள் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத உண்மை!
நீல திமிங்கிலங்கள்
நீல திமிங்கிலங்கள் அவற்றின் வலிமையைப் பாதுகாக்க மற்றும் அதன் ஆற்றல் திறனையும் சேமித்து வைக்க, இந்த உயிரினங்கள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்புக்கு அருகில் தான் வேட்டையாடுகிறது என்பது தற்பொழுது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.
ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
நியூசிலாந்தில் வசிக்கும் நீல திமிங்கிலங்கள் மேற்பரப்பு வேட்டையை அவற்றின் செயல்முறையில் ஒரு முக்கிய பகுதியாகப் பயன்படுத்துகின்றன என்பதை ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து டைனோசர்களின் அளவைக் கூட மிஞ்சும் ஒரே உயிரினமாக நீல திமிங்கிலங்கள் மட்டுமே பூமியில் வாழ்ந்துவரும் மிகப்பெரிய பாலூட்டிகளாகத் திகழ்கிறது.
ராட்சஸ உருவத்திற்கு ராட்சஸ உணவு
நீல திமிங்கிலங்களின் ராட்சஸ உருவத்திற்கு ஏற்றார் போல் அவற்றின் அளவை ஆதரிக்க, அவைகளுக்கு ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவிலான உணவு தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான க்ரில் வேட்டையில் இந்த நீல திமிங்கிலங்கள் ஈடுபடுகின்றன என்றும், இரையை எளிதாக வேட்டையாட இவை நீரின் மேற்பரப்பை அதிகம் தேர்வு செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
டாக்டர் டோரஸ் கூறியதாவது
ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், ஆய்வின் ஆசிரியருமான டாக்டர் லீ டோரஸ், திமிங்கிலங்கள் தங்கள் இரையைக் கண்டுபிடிக்க ஆழமாக டைவ் செய்ய வேண்டும் என்ற தவறான கருத்துக்கு தற்பொழுது பதில் கிடைத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல், டாக்டர் டோரஸ் கூறியதாவது, இந்த உயிரினம் மேற்பரப்பில் வேட்டையாடப் பெரிதும் விரும்புகின்றன, இதன் மூலம் அவை தங்களின் ஆற்றலைச் சேமிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
No comments: