Breaking

நமது வீட்டு மாசுகளை உறிஞ்சும் செயற்கை மரபணு மாற்றத்துடன் போதோஸ் இவி என்ற தாவரம் பற்றி ஒரு பார்வை..






வீட்டு மாசுகளை
உறிஞ்சும் செடி.

தாவரங்கள் காற்று மாசுகளை உறிஞ்சும் என்பது தெரியும். 
அதிக அளவில் காற்றை 
சுத்தப்படுத்துவதற்காகவே செயற்கையாக மரபணு
மாற்றத்துடன் போதோஸ் இவி என்ற தாவரத்தை
உருவாக்கி உள்ளனர் வாஷிங்டன் பல்கலைக்
கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். குறிப்பிட்ட
புரதப்பொருளை
மரபணு முறையில் நீக்கி இதை உருவாக்கினர்.

எனவே இது
தனது வளர்ச்சிக்காக சுற்றுப்புறத்தில் உள்ள 


கார்பனை அதிகமாக
உறிஞ்சுவதுடன்
குளோரோபாம், பென்சீன் போன்ற ஆபத்தான 
நச்சுப் பொருட்களையும் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய
யது. புற்றுநோய் விளைவிக்கும் நச்சுப் பொருட்களையும் உறிஞ்சி கொள்ளக்கூடியது.

புற்று நோய் விளைவிக்கும் நச்சுப் பொருட்களான இவை வீட்டின் சுற்றுப்புறத்தில் இருப்பதை நம்மால் அறியவோ, அகற்றவோ முடியாது.

ஆனால் இந்த செடி வழக்கமான இயற்கை தாவரத்தை விட
அதிக அளவில் மாசுக்களையும்,
நச்சு வாயுக்களையும் உறிஞ்சிவிடுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.