இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களும் !!
இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களும் !!
மக்கள் உண்ணும் உணவும் உணவு பழக்க வழக்கமே அவர்களது உடல்நலத்தை தீர்மானிக்கின்றன. இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர்கள் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும். உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டுமென தமிழ் மருத்துவம் கூறுகிறது. முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது. அன்றாடச் சமையலில் சேர்ப்பனவற்றுள் மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும்.
கொத்தமல்லி பித்தத்தை போக்கும், ஜீரகம் வயிற்று சூட்டைத் தணிக்கும், மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும். பூண்டு வலியை அகற்றி வயிற்றுப் பெருமலை நீக்கிப் பசியை மிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்.
நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனை குறைவாக சேர்த்தல் வேண்டும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, வறுத்த உருளைக்கிழங்கு சீவல், வாழைக்காய் சீவல், புளித்த மோர், கொழுப்பு நிறைந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, இனிப்புக் கட்டி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். உணவை விரைவாக விழுங்கக் கூடாது.
நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயில் உள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து சாப்பிட வேண்டும். உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கு குருதி தூய்மை அடைவதற்கும் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் நீர் இன்றியமையாதது. மனிதன் நாளொன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
No comments: