கிட்னி பெயிலியர். மாரடைப்பு எப்படி நடக்கிறது? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
கிட்னி பெயிலியர். மாரடைப்பு எப்படி நடக்கிறது? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
உடம்பு எனும் தொழிற்சாலை பகுதி 4
ஆக, சுருக்கமாக சொல்வதென்றால் இதயம் எனும் மோட்டர் பலமாக அல்லது வேகமாக சுருங்கி விரிந்தால், பிரசர் அதிகரிக்கும். அல்லது குருதியைக் கடத்தும் பைப்லைனின் விட்டம் குறைந்தால் பிரசர் அதிகரிக்கும்.
இவற்றில் செல்வாக்குச் செலுத்தும் நடைமுறைகளால் அல்லது மாத்திரைகளால் பிரசரைக் குறைகளாம்.
முதலில் நடைமுறைகளால் எப்படி பிரசர் குறையும் என்று பார்ப்போம்.
நீங்கள் ஏதோ ஒரு விடயத்தில் பயப்பட்டால், அல்லது பதட்டமாக இருந்தால் இதயம் படபடப்பதை உணர்வீர்கள்.
அதாவது இதயம் அதிகமாக வேலை செய்கிறதென அர்த்தம்.
இதயம் அதிகமாக வேலை செய்தால் பிரசர் அதிகரிக்கும்.
ஆகவே தியானம் செய்தல், சாந்தமான பாடல் கேட்டல் போன்றவை மூலம் உங்கள் படபடப்பைக் குறைத்தால் பிரசர் குறையலாம்.
அடுத்து உப்பு அதிகமாக சாப்பிடுவது பிரசர் நோயாளிகளுக்கு நல்லதல்ல என்பார்கள்.
காரணமென்ன?
கிட்னியிலே சுரக்கப்படும் ஒரு ஹோர்மோன் குருதிக்குழாய்களை சுருக்கி பிரசரை அதிகரிக்கும். அதே ஹோர்மோன் உப்பிலே இருக்கும் சோடியம் அயன்களை கிட்னியூகாக யூரினோடு வெளியேற்றவும் உதவும்.
ஒருவர் அதிகமாக உப்பு சாப்பிட்டால் அதை உடம்பிலிருந்து வெளியேற்ற அதிகமான ஹோர்மோன் சுரக்கப்படும். அப்படி அதிகமாக சுரக்கப்படும் ஹோர்மோனால் பிரசரும் அதிகரிக்கலாம்.
அதுதான் உப்பு அளவாகச் சாப்பிடுங்கள் எனப்படுகிறது.
ஆனால் கவனிக்கவேண்டியவை இவ்வாறான வாழ்க்கை முறை ஒரு குறிப்பிட்ட அளவுதான் பிரசரைக் குறைக்க உதவும்.
ஒரு குறிப்பிட்ட அளவைவிட பிரசர் அதிகரிக்கும்போது இந்த வாழ்க்கைமுறை மாற்றத்தோடு மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும்.
சரி, மாத்திரைகள் எவ்வாறு தொழிற்படுகின்றன?
சில மாத்திரைகள் இதயம் அதிகம் துடிப்பதைக் குறைக்கும்.
சில மாத்திரைகள் இதயம் பலமாக சுருங்குவதைக் குறைக்கும்.
சில மாத்திரைகள் கிட்னியில் உருவாகும் அந்த ஹோர்மோன் உற்பத்தியை குறைக்கும்.
சில மாத்திரைகள் குருதிக்குழாய்களை விரிவடையச்செய்யும்.
யாருக்கு எந்த மாத்திரை பொருத்தமானதென மருத்துவர் முடிவெடுப்பார்.
பிரசர் அதிகரிப்பதால் எப்படி பாதிப்பு வரும்?
வெரி சிம்பிள்!
தண்ணீர் குழாய்க்குள் அதிவேகமாக தண்ணீரை பம்ப் பண்ணினால் என்ன நடக்கும். ஒருகட்டம் வரை பைப் விரிந்து கொடுக்கும். எல்லை மீறிப்போனால் வெடிக்கும்.
அதேபோல்தான் பிரசர் ஒரு எல்லையை மீறும்போது குருதிக்குழாய்கள் வெடிக்கும்.
இது கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட கால அடிப்படையில் நடக்கலாம்.
உதாரணத்திற்கு கிட்னியில் சின்னதாக தொடங்கும் பாதிப்பு ஒருகட்டத்தில் அதைச் செயலிழக்கச்செய்யும் (கிட்னி பெயிலியர்) அளவுக்கு மோசமாகும். அதுதான் ஆரம்பநிலையிலேயே கிட்னி பெயிலியர் ஆனவர்கள் பிரசரைக் கட்டுப்பாடாக வைத்திருந்தால் அது தீவிரமடைவதைத் தவிர்க்கலாம்.
அதேபோல் கண்ணிலும் நடக்கலாம்.
இதயக் குழாய்களிலிலே இருக்கும் கொழுப்புப்படிவுகள் திடீரென வெடிப்பதற்கும் அதிகரித்த பிரசர் உதவலாம். இது மாரடைப்பு எனப்படும்.
மூளைக்குச்செல்லும் குழாய்கள் திடீரென வெடிப்பதால் பாரிசவாதம் (ஸ்ரோக்) வருகிறது.
No comments: