Breaking

சீன விஞ்ஞானிகள் முதல் முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர்.





சீன விஞ்ஞானிகள் முதல் முறையாக குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர். 

குரங்குகள்,  பிரைமேட் என்பதால் குளோனிங் முறையில் மனித குழந்தைகளை உருவாக்குவது விரைவில் சாத்தியமாகும்  என கருதப்படுகிறது. இது பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர் பிற விஞ்ஞானிகள். இருப்பினும், மரபணு ஒத்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளை எளிதாக்க உதவும் என்கின்றனர். 



SCNT  என்னும் குளோனிங் முறையில் 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மரி ஆடு பிறந்தது.  செல்லில் உள்ள உட்கருவை, டிஎன்ஏ-வுடன் சேர்த்து, கரு நீக்கப்பட்ட முட்டையில் பொருத்துவதன் மூலம் புது உயிரினத்தை உருவாக்குவதே SCNT முறையாகும். இந்த நுட்பத்தை பயன்படுத்தி பிரைமேட் வகை உயிரினத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.  79 முறை தோல்வியடைந்து, கடைசியில் 127 முட்டைகளில் இருந்து 2 குரங்குகளை உருவாக்கியுள்ளனர். மனித குளோனிங் செய்வது எங்களது நோக்கமில்லை எனவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Powered by Blogger.