இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு... மறு தேதி விரைவில் அறிவிப்பு
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம் ஒத்திவைப்பு...
மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில்
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை கடந்த 2019ஆண்டு முதல் இஸ்ரோ நடத்திவருகிறது..
எட்டாம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி போன்ற செயல்பாடுகளில்
மாணவர்களின் ஈடுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு
தேர்வு செய்யப்படுகிறது மேலும்
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் இஸ்ரோ மையத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது..
இந்த நிலையில் மே 11ஆம் முதல்
22 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது..
மேலும் இவற்றுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது..
No comments: