உயிரை குடிக்கும் "சாணி பவுடர்" விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா..
உயிரை குடிக்கும் "சாணி பவுடர்" விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா..
👇👇👇👇👇👇👇👇👇👇
சாணி பவுடர் என்பது உயிர்கொல்லி ரசாயன தன்மை கொண்டது. எனவே
வீடுகளில் அதன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உயிர்கொல்லி ரசாயன தன்மை கொண்ட சாணி பவுடர், உடலுக்குள் சென்ற சில நிமிடங்களில், முக்கிய உயிர் உறுப்புகளை சில மணி நேரங்களில், சேதமடையச் செய்து, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
பயன்படுத்திய சாணி பவுடர் அளவு மிக குறைவாக இருந்து, இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் மட்டுமே, தீவிர சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்ற முடியும்; சாணி பவுடர் அளவு அதிகமாக இருந்து, இரண்டு மணி நேரத்துக்கு பின், தாமதமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், உயிரிழப்பை தவிர்க்க முடியாது.
வீடுகளில் இதை கலந்து சாணம் மெழுகும்போது, பெண்களின் கைகளும் மஞ்சள் நிறமடைகிறது.
இது, உடலுக்குள் சென்று, நாளடைவில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சாணி பவுடர் மெழுகிய தரையில் உணவு, தீனிப் பொருட்கள் விழுந்ததை, குழந்தைகள் எடுத்து சாப்பிட்டால், குழந்தைகள் உடல் நலமும் பாதிக்கும்.
வீடுகளில், சாணி பவுடர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லதாகும்.
குடும்ப பிரச்னை, கடன் தொல்லை, காதல் தோல்வி, தொழில் நஷ்டம் உள்ளிட்ட பல காரணங்களால், சிலர் வாழ்க்கையை வெறுத்து விஷம் குடிக்கின்றனர் இது முற்றிலும் தவறானது.
மேலும் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையாகும்.


No comments: