அனைவருக்கும் GAS காஸ் எளிதில் கிடைக்கும்: ஐஓசி அறிவிப்பு..HELP LINE NUMBER & ONLINE ADDRES.. கொடுக்கப்பட்டுள்ளது
அனைவருக்கும் காஸ் எளிதில் கிடைக்கும்: ஐஓசி அறிவிப்பு..HELP LINE NUMBER & ONLINE ADDRES..
கொடுக்கப்பட்டுள்ளது
சென்னை: ஊரடங்கால் யாரும் பதற்றமடையவோ, கூடுதல் சிலிண்டர்களை புக் செய்யவோ, ஏஜென்சிகளுக்கு நேரடியாக சொல்லவே வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சப்ளை பாயின்ட்கள் மற்றும் மார்க்கெட்டிங் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் காரணமாக, ஊரடங்கு காலத்தில் 15 நாளில் 3.38 கோடிக்கு மேலாக காஸ் சிலிண்டர்களை வழங்கி உள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் 26 லட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள், பதற்றம் அடைந்து புக் செய்ய வேண்டாம் என்றும் சிலிண்டர்கள் பெற விநியோகஸ்தர் குடோன்களுக்கோ ஷோ ரூம்களுக்கோ செல்ல வேண்டாம்.
வாடிக்கையாளர்கள், தங்கள் வீடுகளிலிருந்தே எஸ்எம்எஸ், ஐவிஆர்எஸ் வாட்ஸ் அப் (75888 88824) மூலமாக காஸ் சிலிண்டர்களை புக் செய்து தங்களது வீடுகளில் கிடைக்கப்பெறலாம்.
பேமென்ட்களை இந்தியன் ஆயில்ஒன் மொபைல் ஆப் மூலமாக (அல்லது) https://cx.indianoil.in வலைதளம் மூலமாக செலுத்தலாம்.
அல்லது சிலிண்டர் புக் செய்த பிறகு அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் பேமென்ட் லிங்க் பயன்படுத்தி செலுத்தலாம்.
காஸ்சிலிண்டர் எமர்ஜென்சி ஹெல்ப்லைன் 1906 முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.இந்தியன்ஆயில் நிறுவன மருத்துவ காப்பீடு திட்டம் வகுத்துள்ளது.
இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கோவிட்-19 தொடர்பான பாதிப்புகளும் அடங்கும்.
இந்த திட்டத்தின் கீழ், 1.1 லட்சம் பயனாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் காப்பீடு பெறுவார்கள்.
அது போலவே, ட்ரக் குழுவினர் சப்ளை நிர்வகிக்கும் டெலிவரி பணியாளர்கள் ஆகியோருக்கும் காப்பீடு திட்டம் உண்டு.
கோவிட்-19 பாதிப்பால் மரணமடையும் பட்சத்தில் கருணைத் தொகை ₹ 5 லட்சம் வழங்குவதற்கான காப்பீடு வழங்க இந்தியன் ஆயில் உத்தேசித்துள்ளது. இந்த தொகை, மரணமடைந்தவரின் வாரிசுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 30 லட்சம் உஜ்வலா திட்ட பயனாளிகள், தங்கள் கணக்கில் வரவு பெற்றுள்ள தொகையை செலுத்தி டெலிவரி செய்யப்படும் சிலிண்டரைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போது காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள், பிரதமரின் உஜ்வலா திட்ட பயனாளிகளிடம் அதற்கான காகித வடிவ ஆவணம் எதனையும் கேட்க மாட்டார்கள்.
அத்தாட்சி ஆவணத்தை அவர்கள் டிஜிட்டல் வழிமுறையில் காண்பிக்கலாம்.
காகித வடிவ ஆவணங்களை பதிவேடுகள் பராமரிக்க ஏதுவாக, முழு அடைப்பு நீக்கப்பட்ட பிறகு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.


No comments: