Breaking

ஏப்ரல்-12. கணிதமாறிலிகளான e, pi விஞ்சிய எண்கள் என்று கண்டறிந்த ஜெர்மானிய கணிதவியலாளர்- ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் (Karl Louis Ferdinand Lindemann) பிறந்த தினம்.






இன்று பிறந்தநாள்:- ஏப்ரல்-12.

கணிதமாறிலிகளான e, pi விஞ்சிய எண்கள் என்று கண்டறிந்த
ஜெர்மானிய கணிதவியலாளர்- ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் (Karl Louis Ferdinand Lindemann) பிறந்த தினம்.


பிறப்பு:-

ஏப்ரல்-12, 1852 ஹனோவர், ஜெர்மனியில் பிறந்தார்.மியூனிக், கெட்டிங்கென், ஆகிய இடங்களில் படித்து, எர்லாங்கெனில் ஃபெலிக்ஸ் க்ளைனின் மாணவராக இருந்து முனைவர் 
பட்டம் பெற்றார். 

கண்டுபிடிப்புகள்:-

லியொவில்தான் 
முதன் முதலில் 1844 விஞ்சிய எண்கள் என்ற எண்களை உண்டாக்கிக் காட்டினார்.1873 இல் e ஒரு விஞ்சிய எண்தான் என்று நிறுவியபோது கணித உலகம் அதை ஒரு பெரிய சாதனையாக வரவேற்றது. 

பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து pi இயற்கணித எண் அல்ல என்று உறுதிப்படுத்தினார்.
மேலும் pi வடிவவியலில் அளவுகோல், கவராயம் 
( ruler & compass) இவைகளை மட்டும் கொண்டு ஒரு வட்டத்தின் பரப்பிற்குசமமான சதுரத்தை 
வரைவது என்ற  இப்பிரச்சினைக்கு Squaring the circle என்று பெயர் ஆகும்.



இது எக்காலும் முடியாது என்றார், pi ஒரு விஞ்சிய எண் என்று நிறுவியதன் விளைவு ஆகும். ஏனென்றால் pi ஒரு இயற்கணித 
எண்ணாக இருந்தால் தான் இது முடியும் என்று அவர் காலத்திற்கு முன்னமேயே தெரிந்த கணித உண்மை.

லிண்டெமன் - விய்ர்ஸ்ட்ராஸ் தேற்றம்:-இது ஒரு எண்கோட்பாட்டுத் தேற்றம். லிண்டெமன் தேற்றத்தைவிட பலமானது. சில அடுக்குப் பல்லுறுப்புக்கோவைகளுக்கு (Exponential Polynomials) சூனியப்புள்ளிகள் (Zeros) இருக்கமுடியாது என்பதைச் சொல்கிற தேற்றம் ஆகும்.

மறைவு:-

மார்ச்-06, 1939 ஆம் ஆண்டு,
முனிச், ஜெர்மனியில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.