அமெரிக்க நாசாவின் மரைனர் திட்டம்(Mariner program) பற்றி அறிவோம்
அமெரிக்க நாசாவின்
மரைனர் திட்டம்.
Mariner program
#நோக்கம்:-
#செவ்வாய், #வெள்ளி(மெர்க்குரி)
ஆகிய கோள்களை ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசாவிண்ணாய்வு மையத்தினால் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட #ஆளில்லா #தானியங்கி #விண்கப்பல்களுக்கான திட்டமாகும்.
பூமியில் இருந்து வேறொரு கோளுக்கு முதன் முதலில் ஒரு விண்கப்பலை இத்திட்டத்தின் மூலம் அனுப்பினர்.
அதுமட்டுமின்றி வேறொரு கோளை அதன் ஒழுக்கில் சுற்றி வந்த முதலாவது கப்பலும் இத்திட்டத்திலேயே அனுப்பப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 10 கப்பல்கள் அனுப்பப்பட்டன.
இவற்றில் ஏழு மட்டுமே வெற்றிகரமாக அமைந்தன.
இத்திட்டத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட மரைனர் 11 மற்றும் மரைனர் 12 ஆகியன வொயேஜர் திட்டத்தில்அனுப்பப்பட்டன.
மரைனர் திட்டத்திற்கு மொத்தமாக 554 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழிக்கப்பட்டுள்ளது.
#மரைனர் #திட்டக் #காலம்:-
#மரைனர் 1 - வெள்ளி கோளை நோக்கி 1962 சூலை 22 இல் இது அனுப்பப்பட்டது.
#மரைனர் 2 - இது 1962 ஆகத்து 27 இல் வெள்ளியை நோக்கி 3-மாதத் திட்டத்தில் ஏவப்பட்டது.
#மரைனர் 3 - இது செவ்வாய்க் கோளை நோக்கிச் செலுத்தப்பட்டது.
#மரைனர் 4 - இது செவ்வாய்க் கோளை நோக்கி 1964 நவம்பர் 28 இல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
#மரைனர் 5 - 1967 சூன் 14 இல் வெள்ளி நோக்கி ஏவப்பட்டது.
#மரைனர் 6, 7 - இவை செவ்வாய்க்கு முறையே 1969 பெப்ரவரி 24 இலும், 1969 மார்ச் 27 இலும் ஏவப்பட்டன.
#மரைனர் 8, 9 - செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை.
#மரைனர் 9, 1971 மே மாதத்தில் ஏவப்பட்டது. இது செவ்வாயின் முதலாவது செயற்கைக் கோள் ஆனது. செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு 1971 நவம்பரில் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது.இது 2022 வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#மரைனர் 10 - 1973 நவம்பர் 3 இல் வெள்ளியை (வீனசை) நோக்கிச் செலுத்தப்பட்டது.


No comments: