SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு
SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
மொத்தம் 147 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக SEBI உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 ஆம் தேதி வரையில் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 147
பணியிட விபரங்கள்
பொது- 80, சட்டம் - 34, தகவல் தொழில்நுட்பம் - 22, சிவில் இன்ஜினியர் - 1, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் - 4, ரிசர்ச் - 5, அதிகாரப்பூர்வ மொழி - 1 ஆகும்
வயது :
மேற்குறிப்பிட்ட பணிக்கு 1 மார்ச் 1990 தேதியின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
No comments: