Breaking

புதிய ஸ்டிக்கர்...!! வாட்ஸ் அப் - WHO கைகோர்ப்பு .. !!






புதிய ஸ்டிக்கர்...!!  வாட்ஸ் அப் - WHO  கைகோர்ப்பு .. !!

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வரும் மக்களைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தள செயலிகள் புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் செயலி வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிதாய் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் மக்களின் எண்ணங்கள் என்ன? எதிர்வினைகள் என்ன? என்பதை எடுத்துக் கூறும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் களின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சங்களை வாட்ஸ்அப் உலக சுகாதார மையத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.



பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த ஸ்டிக்கர்கள் கிடைக்கும். இதனை அறிமுகம் செய்வதில் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்த வாட்ஸ்அப் நிறுவனம், இந்த நெருக்கடியான காலத்திலும் அதற்குப் பின்னரும் கூட மக்கள் அவர்கள் எண்ணங்களைத் தெரிவித்து கொள்ள இது உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஸ்டிக்கர்களை விழிப்புணர்வாக, நகைச்சுவையாக எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். மொழி, வயது வித்தியாசமின்றி இதனை பயன்படுத்த முடியும். இந்த ஸ்டிக்கர்களில் உடற்பயிற்சி, கைகழுவுதல், மருத்துவர்களை கொண்டாடுதல்,சமூக விலகல் போன்ற விஷயங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Powered by Blogger.