Breaking

மே-31. லாக் ஒபெரான், அல்லோஸ்டெரிக் ரெகுலேசன் பற்றி விளக்கிய பிரெஞ்சு உயிரியலாளார், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்- ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod) மறைந்த தினம்.






மே-31.



லாக் ஒபெரான், அல்லோஸ்டெரிக் ரெகுலேசன் பற்றி
 விளக்கிய பிரெஞ்சு உயிரியலாளார்,
 மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்- ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod) மறைந்த தினம்.


பிறப்பு:-


பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிப்ரவரி-09, 1910 ஆம் ஆண்டு பிறந்தார். 
இயற்கை விஞ்ஞானத்தில் 1931-ல் பட்டம் பெற்றார். 
1941-ல் இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.


ஆய்வுகள்:-


 பரிணாம வளர்ச்சி, DNA, RNA மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 


சக அறிவியல் வல்லுநர்களுடன் இணைந்து, ‘இ கோலி லாக் ஓபரான்’ ஆய்வை மேற்கொண்டார்.


கேலக்டோசிடேஸ் எனப்படும் என்சைம் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 


நோய் எதிர்ப்பாற்றல் துறை வல்லுநர் மெல்வினுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டார். 


செரிமான நொதியை உற்பத்தி செய்யத் தேவைப்படும் வினையைத் தூண்ட ஒரு உள் சமிக்ஞை செயல்படுவதை 1943 ல் இவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து பொதுவான தூண்டல் கோட்பாட்டை வெளியிட்டனர்.


மரபுசார் தன்மைகள், சூழல் தொடர்பான நொதி தொகுப்பின் செயல்பாடு குறித்து விஞ்ஞானி ஜேக்கப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு தான் புரோட்டீன் தொகுப்பு மாதிரியை இவர்கள் உருவாக்க வழிவகுத்தது.
DNA இழையின் தொடக்கத்தில் உள்ள ஓபரான் என்ற மரபணு தொகுப்பு, அதன் தற்போதைய சூழலுக்குத் தேவைப்படும் ஒரு குறிப் பிட்ட புரதத்தை உற்பத்தி செய்வதற்கான சமிக்ஞையை அனுப்பு கிறது என்பதையும் கண்டறிந்தனர். 


ஆபரேட்டர், கட்டமைப்பு மரபணு என்ற 2 முக்கியமான மரபணுக்களையும் கண்டறிந்தனர்.


பணிகள்:-


கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் அறிவியல் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.


பாஸ்டர் கல்வி நிறுவனத்தின் செல் உயிரி வேதியியல் துறை தலைவராக 1954-ல் பொறுப்பேற்றார்.



சோர்போன் பல்கலைக்கழகத்தில் வளர்சிதை வேதியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார்.


பரிசுகள்:-


மரியாதைக்குரிய படையணி விருது,





ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பை இவரோடு இணைந்து பிரான்கோயிஸ் ஜேக்கப், ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உலகுக்கு வழங்கினர். இந்த கண்டுபிடிப்புக்காக 1965-ல் இவர்கள் மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Forமெம்பர் ஆஃப் ராயல் சொசைட்டி-1968,

மறைவு:-


 மூலக்கூறு உயிரியலின் தந்தை என அழைக்கப்பட்ட இவர், தனது 66-வது வயதில் 

மே-31, 1976 ஆம் ஆண்டு,

கேன்ஸ், பிரான்சில்
மரணமடைந்தார்.


No comments:

Powered by Blogger.