மே-31. இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். (World NoTobacco Day).
மே-31.
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்.
(World NoTobacco Day).
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1987-ல் உலக சுகாதார நிறுவனம், மே 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.
ஆண்டுதோறும் சுமார் 55 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் இறந்து வருகிறார்கள்.
இவர்களுள் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.
15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 57% பேரும், பெண்களில் 10.8% பேரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் உபயோகிக்கின்றனர்.
புகையிலையினால் ஏற்படும் வாய்புற்று நோய் இந்தியாவில் லட்சத்திற்கு 10 பேரை பாதிக்கிறது.
இந்தியாவில் 53% ஆண்களும், 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகையினால் ஏற்படும் பாதிப்புகள்:-
புகை பிடிப்பது மூலம் வாய், நூரையீரல், சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்று நோய், ஆஸ்துமா, காச நோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன.
தொடர் புகைப் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் விரைவிலேயே வருகிறது.
சிகரெட் தீமைகள்:-
தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது.
புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது.
ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும், அது இறந்தே பிறக்க கூடும்.
ஆர்வக் கோளாரினால் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.
பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகை பிடிப்பவர்கள் அதிகம்.
நன்மைகள்:-
ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகை பழக்கத்தைக் கைவிட்டு 10-15 ஆண்டுகள் கழித்து தான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
ஆய்வுகள்:-
புகைபிடித்தல் மன அழுத்த அறிகுறிகளை உருவாக்கலாம் என்றும், அந்த அறிகுறிகளை போக்கும் விதமாக புகைபிடித்தலை தொடர்ந்து, அப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஆபத்து அதிகரிக்கும் என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.
அதாவது புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் தனது உடலளவில் ஏற்படும் மாற்றங்களை போக்க அனைவரும் எண்ணுவர். இருமல், கை நடுக்கம் உள்ளிட்ட அழுத்த உணர்வுகளின் பல அறிகுறிகளிலிருந்து உடனடியாக விடுபட மீண்டும் புகை பிடித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இவ்வாறு தொடர்வதால் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகி அதிலிருந்து மீள்வது கடினமாகிறது.
இளைஞர்களுக்கு புகை பிடிக்காதீர்கள், புகைபிடிக்க ஒரு முறை கூட முயற்சிக்க வேண்டாம் என்பதே இந்த ஆய்வின் செய்தியாக உள்ளது.
எப்போதாவது புகைபிடித்தால் கூட, அது நீண்டகால பாதிப்புகளை கொண்டு வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.
பெரியோர் புகைப் பிடித்து விட்டு தூக்கி எறியும் துண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து புகைக்க நினைக்கும் இளம் வயதினருக்கு இந்த ஆய்வு ஓர் எச்சரிக்கை.
புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது கடினமான செயல் இல்லை, நமது மனதால் அதை எளிதில் வென்றுவிடலாம்.
தவிர்க்கும் முறை:-
புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நூலகம், கோவில் போகலாம்; தியானம் செய்யலாம்.
வாழ்வை புகையாக்கும் புகை பழக்கம் நமக்கு வேண்டாமே.
புகை நமக்கு பகை.
மொத்தத்தில் புகையிலையை ஒழித்து, நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
புகையில்லா உலகம் போற்றுவோம்.
No comments: