Breaking

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்வு...





தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்வு...

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியருகுளு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 வயதாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.