அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பா.. கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் ஆலோசனை ..
அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பா..
கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் ஆலோசனை ..
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது இதற்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 1-ந் தேதி முதல் தொடங்க உள்ளன ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதனால் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார் .அப்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கான வருகை நாட்கள் குறையும் பாடங்கள் முடிப்பதில் சிரமம் ஏற்படும் எனவே ஆன்லைன் மூலம் கற்றுக் கொடுக்கும் முறையை தொடரலாமா அதற்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்கலாமா, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவது மாணவர்களை உரிய முறையில் சென்றடைகிறதா என்பது பற்றி விவாதிக்கப்பட்டது மேலும் இந்த கூட்டத்தில் மதுரை மேலூர் உசிலம்பட்டி திருமங்கலம் கல்வி அலுவலர்கள் உயர்நிலை மேல்நிலை மற்றும் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்


No comments: