Breaking

நீட் தேர்வு கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்பு..





நீட் தேர்வு கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்பு..

கொரோண பொது முடக்கம் காரணமாக
நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக மே 20ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது இதற்காக ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் நேரடி படபிடிப்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது.

கொறோன தொற்று பரவல் காரணமாக  நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளும் போட்டித் தேர்வு மூலம் கூட தற்போது சூழலில் நடத்த முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு அடைந்த போதும் கரோனா அச்சத்தால் இறுதித்தேர்வு பெரும்பாலான மாணவ மாணவியர் எழுத முடியாமல் போனது அவர்களுக்காக வரும் 4 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்வார்.

இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளியில் பணியாற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் ஐந்து நாட்களுக்கு பாடவாரியாக ஆசிரியர்கள் பற்றி ஒரு நடத்துகின்றனர் தினசரி 2 மணி நேரம் நடைபெறும் இந்த பயிற்சியை வகுப்பை கல்வி தொலைக்காட்சி வாயிலாக பார்த்து மாணவர்கள் பயன்பெற முடியும் ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பது நேரடியாக ஒளிப்பதிவு செய்து வருகின்றனர்.


நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்குமார் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தொடங்கி ஐந்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது..

இதுகுறித்து தேர்வுத்துறை இணை இயக்குனர் அவர்கள் கூறியதாவது

கல்வித் தொலைக்காட்சி 70 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக தொலைக்காட்சியில் அனைத்து வகையிலான பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வித்துறை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் சென்னைக்கு வரவழைத்து அவர்கள் பயிற்றுவிப்பதை பட பதிவு செய்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வோம் தற்போது  கரோணா தோற்றால் ஆசிரியர்கள் வரமுடியாத நிலையில் அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று முதன்மை கல்வி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்தி வரும் மே 20ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரையில் இந்த நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்

No comments:

Powered by Blogger.