தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி..
தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி..
மையத்துக்கு மாணவர்களை அழைத்து வரவும் தேர்வு முடிந்த பின்னர் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பன்னிரண்டாம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள பொது தேர்வு ஜூன் 2 ஆம் தேதி பிளஸ் டூ வகுப்பைச் சார்ந்த 36 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார் இந்த நிலையில் மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து வர பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார் .
இது குறித்து அமைச்சர் அவர்கள் த வெளியிட்டுள்ள பதிவு
தேர்வு மையத்துக்கு வருகிற மாணவர்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும் தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளை சென்று விடுவதற்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறையில் செய்யப்பட்டிருக்கிறது மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார்
No comments: