தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்..
உடல்நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்..
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலை ஞாயிறு சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1973இல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தொடங்கி அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்
1978 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திமுக சார்பில் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மன்ற கலைஞர், பெரியாரியாலாளர், ஒவை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். ஆசிரியர்கள் நலன் மற்றும் கல்வி நலனுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து சிறை சென்றவர் இவருக்கு மனைவி சீதை அம்மாள் மகன் நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் உள்ளனர். இறுதி சடங்கு தலைஞாயிறு அக்ரஹாரம் தெருவில் உள்ள இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது..
ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
No comments: