உடம்பிற்கு ஆரோக்கியமான ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ??
உடம்பிற்கு ஆரோக்கியமான ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ??
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் துருவியது _ 200 கிராம்
கோதுமை மாவு _ 200 கிராம்
நெய் _ 100 கிராம்
ஏலக்காய் தூள் _ சிறிதளவு
சீனி _ 400 கிராம்
பால் _ 200 கிராம்
முந்திரி பருப்பு _ சிறிதளவு
கேசரி பவுடர் _ சிறிதளவு
செய்முறை :
பாலில் துருவிய ஆப்பிள் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும்.
No comments: