Breaking

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டறிவது தெரியுமா ..?




செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டறிவது தெரியுமா ..?


செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் ஏற்படும் தீமைகளின் தொகுப்பு.!

பழங்களை கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இது பார்க்க வெண்மை நிறமாகவும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனை வரும். தேவையான அளவுகார்பனேட் உப்பை ஒரு பேப்பரில் கட்டி வைத்துவிட்டால் 24 மணி நேரத்திற்குள் பழங்களின் மேல் தோல் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறிவிடும்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மனமின்றி இருக்கும்.
பழங்களில் மேல் தோல் ஒரே சீராக நிறமாகத் தோற்றமளிக்கும் இதை வைத்தே செயற்கை முறையில் பழுத்த பழங்களை கண்டறியலாம்.

இயற்கையில் பழுத்த பழங்களில் காம்பு பகுதிதான் கடைசியாக பழுக்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் அப்படி இருக்காது.
செயற்கை முறைகள் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் அல்சர் செரிமானக் கோளாறு, ரத்த அழுத்தப் பிரச்சினைகள் மாற்றும் கல்லீரல் கோளாறு போன்றவை ஏற்படும்.
மேலும் நரம்பு தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு, வாயுக்கோளாறு என தொடங்கி ஒரு கட்டத்தில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது போன்ற பழங்களை கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
செயற்கை முறையில் பழுத்த பழங்களை வாங்கினால் உப்புத் தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவ வேண்டும்.
மேலும் பழத்தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம்.
உடல்நலம் நன்கு மேம்பட வீட்டிலேயே இயற்கையான முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவது நல்லது.

No comments:

Powered by Blogger.