பேசும்’ நீர்வாழ் உயிரினங்கள்!..
பேசும்’ நீர்வாழ் உயிரினங்கள்!
நீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள்.
நீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும்?
வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.
மீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன. திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன.
இந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.
இதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் மூலம்தான் பிடிக்கிறது. பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
No comments: