Breaking

ஒரு ‘டம்ளர்’ குடிநீரில் ஒரு கோடி ‘பாக்டீரியா’


ஒரு ‘டம்ளர்’ குடிநீரில் ஒரு கோடி ‘பாக்டீரியா’


குடிநீரில் எண்ணற்ற நுண்ணியிரிகள் (பாக்டீரியா) காணப்படுகின்றன. இதனால் தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
குடிநீர் குழாய்களில் தான் இந்த நுண்ணியிரிகள் அதிகம் காணப்படுகின்றன. இவை குழாய்களின் உள்ளே ஒரு மெல்லிய படலத்தை (பயோபிலிம்) உருவாக்கி, நீர் மாசு படாமல் காக்கிறது.
சுத்திகரிப்பு நிலையங்களைவிட, நுண்ணயிரிகளின் உதவியால்
குழாய்களில் தான் குடிநீர் அதிகம் சுத்தம் செய்யப்படுகிறது. இது, முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போதைய ஆராய்ச்சியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு மில்லி லிட்டர் நீரில் 80 ஆயிரம் நுண்ணியிரிகள் இருப்பது தெரிய வந்தது. இந்த நன்மை செய்யும் நுண்ணியிரிகளின் செயலை தொடர்ந்து கண்காணித்து வந்த போது, நீரின் பாதுகாப்புக்கு காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுவீடன் பல்கலை ஆராய்ச்சியாளர் கேத்தரின் பால் தெரிவித்தார். ஒரு ‘டம்ளர்’ துாய்மையான குடிநீரில் ஒரு கோடிக்கும் அதிகமான நன்மை செய்யும் நுண்ணியிரிகள் உள்ளன. ‘மைக்ராஸ்கோப்’ மூலம் பார்த்தால் இந்த நுண்ணியிரிகளின் பணி தெரிய வரும். இந்த ஆராய்ச்சி குடிநீர் குழாய்களின் அமைப்பை மேம்படுத்த உதவும் என கூறப் படுகிறது.
செயற்கை நீர் சாத்தியமா:


செயற்கையாக நீரை உருவாக்குவது மிகவும் கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக் கூடியவை. ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடியவில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது.
ஆக்சிஜன், இரட்டை அணு வாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித் தெடுத்தால், இரண்டும் நிலையான ‘எலக்ட்ரான்களை’ கொண்டிருக்கும். ஒரே அளவு ‘எலக்ட்ரான்கள்’ கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்) ஏற்படும். செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன.
ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழை நீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குவதை தவிர்த்து, பாதுகாப்பது மிகவும் அவசியம்.

No comments:

Powered by Blogger.