குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை எவை ....
குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டியவை எவை ....
குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்கள் உடலிலும் குழந்தையின் உடலிலும் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் கண்காணிக்க உதவும். கர்ப்ப காலத்தில் நீங்கள் உருவாக்கும் பழக்கங்கள், இறுதியில் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பதால் இது ஒரு முக்கியமான நேரம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண் தினமும் 500 முதல் 800 மி.கி. வரை ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை பரிந்துரைக்கிறது.
கர்ப்ப காலத்தில் குறைந்த அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வது, குழந்தைக்கு ஆட்டிசம் உருவாக வழிவகுக்கும் என்கிறது ஆராய்ச்சி.
எனவே மருத்துவர் பரிந்துரைப்படி சரியான அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் கர்ப்பத்திற்குப் பிறகு அடுத்த 12 மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். அதிக வயதில் கருத்தரிக்கும் பெற்றோரின் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. துரிதவகை உணவுகள், உடல் நலத்திற்கு தீங்கு உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதும் குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது அவசியம்.
No comments: