Breaking

உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ....




உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ....


பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஹேக்கர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. ணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்கர்களுக்கு கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வழக்கமான பதங்களைப் பயன்படுத்த வேண்டாம், அகராதி சொற்கள் வேண்டாம், குறைந்தது எட்டு எழுத்துக்களாவது இருக்க வேண்டும். பலரும் இவற்றை அறிந்திருப்பதில்லை. அப்படியே அறிந்திருந்தாலும், தங்கள் பாஸ்வேர்டுகளை வலுவாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து, பாஸ்வேர்டு வலுவானதா? என பரிசோதித்து சொல்லும் புதிய சேவை ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

இணையவாசிகள் தாங்கள் உருவாக்க விரும்பும் பாஸ்வேர்டை இந்த சேவைக்கான தளத்தில் 'டைப்' செய்தால், அது எந்த அளவு வலுவானது என்று உணர்த்தப்படுகிறது. இந்த வகை சேவை ஒன்றும் புதிதல்லதான்.

பாஸ்வேர்டு வலுவானதா என்பதைக் கண்டறிந்து சொல்லும் இந்த வகை சேவை 'பாஸ்வேர்டு மீட்டர்' எனக் குறிப்பிடப்படுகின்றது. உங்கள் பாஸ்வேர்டு பலவீனமானது, அதை மேலும் வலுவாக்க முயற்சி செய்யுங்கள் எனும் செய்தியை தெரிவிப்பதே பாஸ்வேர்டு மீட்டரின் நோக்கம். ஆனால் இந்த மீட்டர்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுவான பலவீனம் உண்டு. இவை பாஸ்வேர்டுகள் பலவீனமானவை என்று சொல்கின்றனவே தவிர, வலுவான பாஸ்வேர்டுகளை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவது இல்லை.

ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது அது, வலுவானதா என சோதித்துப் பார்ப்பது நல்லதுதான். இந்தக் குறையை போக்கும் வகையில் கார்னகி மெலான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய பாஸ்வேர்டு மீட்டர் சேவை அமைந்துள்ளது. இந்தச் சேவை, புதிய பாஸ்வேர்டு வலுவானதா என்பதை உணர்த்துவதோடு, அதற்கான காரணங்களையும் புரிய வைக்கிறது. அதோடு பாஸ்வேர்டை வலுவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.

No comments:

Powered by Blogger.