Breaking

புளிச்ச கீரை துவையல் செய்வது எப்படி ...






புளிச்ச கீரை துவையல் செய்வது எப்படி ...

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்து ஆய்ந்த புளிச்ச கீரை - 1 கட்டு
காய்ந்த மிளகாய் - 20,
தனியா - 1 ஸ்பூன்,
வெந்தயம், கடுகு - 1 ஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - 1 துண்டு,
வெங்காயம் - 1 (அரிந்தது),
பூண்டு - 20 பல் (உரித்தது),
புளி - சிறிதளவு,
எண்ணெய் - 150 கிராம்,
கடுகு - தாளிக்க.


செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், கடுகு, பெருங்காயம் இவைகளை வறுத்து தனியாக வைக்கவும். பின்பு அதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, கீரை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

முதலில் வறுத்த கலவையை மிக்சியில் கரகரப்பாய் அரைக்கவும். (தனியாக எடுத்து வைக்கவும்) பின்னர் கீரை வதக்கிய கலவையை  மிக்சியில் நைசாக அரைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, இரு கலவைகளையும் நன்கு வதக்கவும். பின்னர் கடுகு தாளிக்கவும். சுவையான புளிச்ச கீரை துவையல் தயார். இதனை பத்திரப்படுத்தி வைத்தால் 1 மாதம் வரை கெடாது.

No comments:

Powered by Blogger.