பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி
பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
பீட்ரூட் துருவல் - 1 கப்,
பச்சை மிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய், கடுகு, உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு,
தயிர் - 1/2 கப்.
செய்முறை
பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும்
கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து தேவையான தண்ணீருடன் கொதிக்க விடவும். ஆறியதும் தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். வண்ணமயமான பச்சடி, கலந்த சாதங்களுடன் பரிமாறலாம்
No comments: