ஆகஸ்ட் -05, 1930.. நிலவில் தரையிறங்கிய முதல் மனிதர், அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம் .. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்..
ஆகஸ்ட் -05, 1930..
நிலவில் தரையிறங்கிய முதல் மனிதர், அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம் ..
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்..
நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong) ஆகஸ்ட் 5, 1930ல் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக பணிபுரிந்தார். அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் வளரத் தொடங்கியது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, ஜூலை 20, 1936ல் வாரன், ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை அவர் அனுபவித்தார். அவரும் அவருடைய அப்பாவும் "டின் கூஸ்" என்றும் அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் சவாரி செய்தனர். அவரது தந்தை கடைசியாக மீண்டும் வாப்கோநெட்டா நகரத்திற்கு 1944 ஆண்டு திரும்பி வந்தார்.
ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேலும் வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார். அவர் தனது 16 ஆவது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஒட்டுனர் உரிமமும் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் ஆண் சாரண இயக்கத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவராக இருந்தார். அதனால் அவருக்கு கழுகு சாரணர் என்ற பட்டம் கிடைத்தது. அமெரிக்காவின் பாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆப் அமெரிக்கா அதன் புகழ்பெற்ற ஈகிள் ஸ்கவுட் விருது மற்றும் சில்வர் பஃபேலா விருது ஆகியவற்றால் அவரை அங்கீகரித்தது. 1947 ஆம் ஆண்டில், 17 வயதில், ஆம்ஸ்ட்ராங் பர்டீ பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலைப் படிக்கத் தொடங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இருந்தார். அவருக்கு மாஸாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) படிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அவருக்கு தெரிந்த MITயில் படித்த நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அவர் MIT சேரவில்லை.
ஜனவரி 26, 1949ல் கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அவரது 18 ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவுக்கு அவர் நேரில் ஆஜாராக வேண்டும் என்று அந்த அழைப்பு வந்திருந்தது. இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட 18 மாதங்கள் நீடித்தது. அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமான இயங்குவதற்கு தகுதி பெற்றார். ஆகஸ்ட் 16, 1950ல் அவரது 20 வது பிறந்தநாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கடற்படை விமானிக்கான முழுத் தகுதியும் பெற்று விட்டார் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. தனது முதல் பணியாக கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7ல், NAS சான் டியாகோவில் (NAS வட தீவு) ஆரம்பித்தார். இரண்டு மாதங்கள் கழித்து அவர் ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார். ஜனவரி 5, 1951ல் அன்று ஒரு F9F-2B பாந்தர் விமானத்தில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார்.
ஜூன் மாதம், அவர் தனது முதல் ஜெட் விமானத்தை USS Essex (எசெக்ஸ்) விமானம் தாங்கி கப்பல் மீது தரையிறக்கினார். அந்த மாத இறுதியில், எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது. ஆகஸ்ட் 29, 1951ல் சோஞின் மீது ஒரு புகைப்பட உளவுத் திட்டத்தின் துணை விமானியாக கொரிய யுத்தத்தில் ஆம்ஸ்ட்ராங் முதலில் பணி செயதார். ஐந்து நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 3ல் வொன்சனின் மேற்குப் பகுதியான மஜோன்-நியின் தெற்கே பிரதானப் போக்குவரத்து மற்றும் சேமிப்பக வசதிகள் மீது ஆயுதமேந்திய விமானதுடன் அவர் பறந்தார். சுமார் 350 mph (560 km/h) வேகத்தில் சென்று சிறிய குண்டு வீசும் போது, ஆம்ஸ்ட்ராங்கின் F9F பாந்தர் விமானம், விமான எதிர்ப்பு ஏவுகனையால் தாக்கப்பட்டது. கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றபோது, அவரின் பாந்தர் விமானத்தின் வலது இறக்கை மூன்று அடி (1 m) துண்டிக்கப்பட்ட சுமார் 20 அடி (6 m) உயரத்தில் ஒரு முனையில் மோதியது. ஆம்ஸ்ட்ராங் விமானத்தை நட்பு பிரதேசத்திற்கு பறந்து சென்று அவர் தண்ணீரில் விமானத்தை இறக்க திட்டமிட்டார். ஏனென்றால் கடற்படை ஹெலிகாப்டர்களால் காப்பாற்றப்படுவார் என்று நினைத்தார். இதுவே அவரின் ஒரே பாதுகாப்பான விருப்பமாக இருந்தது.
அதனால் போஹங்கிற்கு அருகே ஒரு விமானநிலையத்திற்கு பறந்தார். அவர் ஆபத்துக் கால தப்பிக்கும் வழிமுறையை பயன்படுத்தி வெளியேற முயன்று மீண்டும் நிலத்தில் இருக்கையுடன் தூக்கி வீசிப்பட்டார். அவரது விமான பள்ளியில் இருந்து அறைத்தோழர் ஒருவர் ஒரு ஜீப்பில் வந்து ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்றினார். 125122 F9F-2 என்ற விமான அழிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொரியா மீது 78 முறை பறந்தார். மொத்தம் 121 மணி நேரம் காற்றில் பறந்தார். அவர் முடித்த 20 போர் முயற்சிகளுக்கான விமானப் பதக்கம், அடுத்த புதிய 20 முயற்சிகளுக்கான தங்க நட்சத்திரம் மற்றும் கொரிய சேவை பதக்கம் மற்றும் என்கேஜ்மன்ட் நட்சத்திரம் ஆகியவற்றைப் பெற்றார். ஆகஸ்ட் 23, 1952ல் 22 ஆம் வயதில் ஆம்ஸ்ட்ராங் கடற்படை சேவையில் இருந்து ராஜினாமா செய்தார்.
கடற்படை சேவைக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் பர்டீ திரும்பினார். கொரியாவில் இருந்து திரும்பிய பிறகு வந்த நான்கு பருவ தேர்வுகளில் அவர் சிறந்த மதிப்பெண்களை பெற்றார். அவர் முன்பு சராசரி மதிப்பெண்கள் பெற்றார். அவர் திரும்பிய பிறகு ஃபை டெல்டா தீட்டா சகோதரத்துவம் பங்களிக்க உறுதியளித்தார். மேலும் அனைத்து மாணவர்களின் எழுச்சியின் ஒரு பகுதியாக தனது பங்களிப்பாக ஒரு சக இசை இயக்குனராக இசை அமைத்தார். அவர் கப்பா கப்பா சை தேசிய விருது பெற்ற பேண்ட் சகோதரத்துவத்தின் உறுப்பினராகவும், பர்டீ அனைத்து அமெரிக்க அணிவகுப்புப் பேண்டில் ஒரு பாரிடோன் வீரராகவும் இருந்தார். ஆம்ஸ்ட்ராங் 1955 ஆம் ஆண்டில் வானூர்தி பொறியியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.
ஆம்ஸ்ட்ராங் அப்போலோ 8 விண்வெளித் திட்டத்தில் ஒரு மாற்றுத் தளபதியாக செயல்பட்ட பின்னர் டிசம்பர் 23, 1968ல் அப்போலோ 11 விண்வெளித் திட்டத்தில் செயல்படும் தளபதியாக பதவி ஏற்றார். அப்போது அப்போலோ 8 சந்திரன் சுற்றுப்பாதையில் இருந்தது. 2005 ஆம் ஆண்டில் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரிதையை வெளியிடும் வரை இந்தச் சந்திப்பைப் பற்றி வெளியிடப்படவில்லை. செலேடன், திட்டமிடப்பட்ட குழுத் தளபதியாக ஆம்ஸ்ட்ராங் இருந்த போதிலும், சந்திரப் பயணத் திட்டத்தில் விமானியாக பஸ் அல்டரினும் மற்றும் செயல்படுத்தும் விமானியாக மைக்கேல் காலின்ஸ்னும் தான் இருந்தனர். அவர் ஆல்ட்ரினை மாற்றுவதற்கான வாய்ப்பை ஜிம் லோவெல்க்கு வாய்ப்பை கொடுத்தார். ஒரு முழு நாள் சிந்தனைக்குப் பிறகு ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினுக்கு மாற்றாக செயல் பட ஒப்புக்கொண்டார். ஏனென்றால் லோவெல் ஏற்கனவே ஜெமினி 12 திட்டத்தில் செயல்படும் விமானியாக இருந்தார்.
ஜூலை 20,1969ல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடு பட்டனர். அங்குள்ள பாறைத் துகள்களை சேகரித்தனர். தங்களது காலடித் தடங்கள் உட்பட பல புகைப்படங்களை எடுத்தனர். அமெரிக்க தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் நிலாவில் கழித்தனர். உலகப் புகழ்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்காவில் ஹீரோவாகப் புகழப்பட்டார். உலகம் முழுவதும் 17 நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது உட்பட பல பரிசுகள், விருதுகள் பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 7, 2012ல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இருதயத்தின் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரிசெய்ய அவருக்கு மாற்றுப்பாதை (bypass) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நலத்தில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25,2012ல் அன்று தனது 82வது அகவையில் சின்சினாட்டி, ஒகைய்யோ, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர்- அவருடைய காலத்தில் மட்டுமல்ல, ஆனால் எல்லா காலத்திலும்" என்ற அறிக்கை வெளியிட்டு கெளரவப் படுத்தியது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
No comments: