Breaking

இன்று முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..





இன்று முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள்
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..

கடந்த மார்ச் மாதத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றதை அடுத்து கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் 12 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதேப்போல் 12 ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் 7 ஆம் தேதி வரை விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

No comments:

Powered by Blogger.