Breaking

கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற சிறப்புத் திட்டம்..





கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

தமிழக அரசின் கடும் நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்களுக்கு வீட்டில் இருந்தே அரசு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையைப் பெறும் திட்டத்தை தமிழக அரசு வடிவமைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக அரசு இந்த திட்டத்தை தயாரித்துள்ளது. இதன்படி, லேசான, மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகள் வீட்டில் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கலாம். அவர்களைதொலைதூரத்திலிருந்து மருத்துவர்கள் குழு கண்காணிக்கும்.

நோயாளிகளை தினமும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். 14 நாட்களும் இணையம், மொபைல் வழியாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுடன் துணையாக இருப்பார்கள். இதற்காக 20 பேர் கொண்ட மருத்துவக் குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். இதில் பொது நலம், தொற்று நோயியல் மருத்துவர், மனநல மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்டோர் இருப்பர்.
வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதை எதிர்கொள்ள உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பப்படும். இதற்காக 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையிலேயே நிறுத்தப்பட்டிருக்கும். மருத்துவமனையில் அவர்கள் உயிர் காக்கும் சிகிச்சை உடனடியாக தொடங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகள் பல ஆயிரம், லட்சங்களில் இது போன்ற சிகிச்சையை அளிக்கின்றன. ஆனால், தமிழக அரசு இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது. இந்த புதிய திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

No comments:

Powered by Blogger.