சிலந்தி வலை ரகசியம்!
சிலந்தி வலை ரகசியம்!
சிலந்தி வலை, தோட்டா துளைக்காத 'கெவ்லார்' இழைகளைவிட மிகவும் பலம் மிக்கது. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இயற்கை சிலந்தி வலை, இன்னும் பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது.
அண்மையில், 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியான ஆய்வின்படி, குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் படும் போது, வலையின் இழைகள் லேசாக சுருங்குவதோடு, திரிந்தும் போகின்றன.
இது ஏன் என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள், 70 சதவீத அளவு ஈரப்பதம் படும்போது, இழையில் உள்ள, 'புரோலின்' என்ற அமினோ அமிலமும், நீர் மூலக்கூறுகளும் வினைபுரிவதால், திரி போல சுருள்வதும், சுருங்குவதும் நிகழ்கிறது என்று கண்டறிந்தனர்.
சிலந்தி வலை இழைகளின் இந்த தன்மை, ரோபோக்களின் கைகள், கால்களுக்கு செயற்கை தசைகளை உருவாக்க உதவும் என, ஆராய்ச்சியாளர்கள் அக்கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.


No comments: