மனநோய் பற்றிய ஒரு சிறிய பார்வை :-
மனநோய் பற்றிய ஒரு சிறிய பார்வை :-
சாமி வந்து ஆடுகிறது என்பதெல்லாம் இன்றும் கிராமங்களில் நாம் காணும் சர்வசாதரணமான நிகழ்வு. சாமி ஆடுதல் ஒரு வகையான மனவியாதி். இது , ஆட்டோ ஹிப்னாசிஸ் எனும் மன நோய் வகையைச் சேர்ந்தது என்கின்றனர் . ஆட்டோ ஹிப்னாசிஸ் என்றால் , தனக்கும் கடவுளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் , கடவுள் தன்னுடன் பேசுவதாகவும் , சாமி தன் உடலில் புகுந்து மக்களுக்கு அருள் புரிவதாகவும் , தனக்குத் தானே ஆழ்ந்த நம்பிக்கை உருவாக்கிக் கொள்கிறார்கள் , அந்த எண்ணத்தை உடையவர்களாக அவர்கள் ஆளாகும் போது அவருடைய உள் மனம் அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் அவர் சாமி ஆடுவது போன்ற நிலையை அதாவது , வெளி மனதில் வாழ்பவர் தன் சுய நினைவு இழந்து உள் உணர்வு நிலைக்கு உடையவராகத் தள்ளப்படுகிறார் ..
அதே போல் பேய் , பிசாசுகளில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்
" டிரான்ஸ் " எனும் மனநோய் சார்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள் , இவர்களுக்குத் தான் மனரீதியாக சில மாற்றங்கள் ஏற்படும் போதும் , உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்க்குள்ளாகிறவர்களும் இவர்கள் தான் ! இத்தகைய மாற்றங்கள் மனரீதியாக தொடர்ந்து உடல் ரீதியாக வெளிப்படுகிறது , இவர்களின் நடவடிக்கைகளையும் , செயல்களையும் வைத்து இவை ஆவிகளின் வேலையென்று கருதி விடுகிறார்கள் ..
இப்படியிருக்கையில் சாமி வந்து ஆடுபவர் மீது பெருமைக் கொள்வதும் , பேய் வந்து ஆடுபவரை சமுதாயத்தில் ஒதுக்கி வைப்பதும் இன்றைய காலம் வரை தொடர்கிறது !
ஆனால் மனோதத்துவ மருத்துவத்தில் ஆட்டோ ஹிப்னாசிஸ் மற்றும் டிரான்ஸ் ஆகிய இரு மனநோய்க்கும் ஒரே சிகிச்சை முறையான
" ஹிப்னோ திரெபி " என்ற சிகிச்சை தான் அளிக்கப்பட்டு வருகிறது ! இவை இரண்டுமே நரம்பு சம்மந்தமான நோய் தான் என்பது புலனாகிறது ! இவை ஒவ்வொரு மனிதனுடைய வளர்ப்பு முறையிலும் , நண்பர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் தான் உருவாகிறது !
இந்த சிகிச்சைமுறை ஒரு புறம் இருந்தாலும் ! நற்சிந்தனையுள்ள நூல்களைப் படிப்பதாலும் , நல்ல தலைவர்களின் கொள்கை முறையைப் பின்பற்றினாலும் கூட இந்த மன நோய் சம்மந்தமானவைகளிலிருந்து விடுபடுவதற்க்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன !

No comments: